மேலும் அறிய

Napoleon: மகன் திருமணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முதல் பத்திரிகை வைத்த நடிகர் நெப்போலியன்!

Nepoleon Son Marriage: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வைத்துள்ளார் நெப்போலியன்.

நெப்போலியன்

1991ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய  ’புது நெல்லு புது நாத்து’ படத்தில்  நடிகராக  அறிமுகமானவர்  நெப்போலியன்.  குணச்சித்திர கதாபாத்திரங்களில்  நடிக்கத் தொடங்கி பின் 1993ஆம் ஆண்டு சீவலப்பேரி பாண்டி படத்தில்  நாயகனாக அறிமுகமானார். 100 படங்களுக்கும் மேல் நடித்த நெப்போலியன் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கோலிவுட் தாண்டி 'டெவில்ஸ் நைட்’, ’க்ரிஸ்மஸ் கூப்பன்’ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.   தமிழில் இறுதியாக பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ’சுல்தான்’ படத்தில் நடித்திருந்தார். சினிமா தவிர்த்து திமுக ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார் நெப்போலியன்

நெப்போலியன் மகன் திருமணம்

நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார் . இந்த தம்பதிக்கு  தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். நெப்போலியனின் இளைய மகன் குணால் மஸ்குளர் டிஸ்ட்ரோஃபி எனப்படும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து தனது திரை வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக விலகி  அவரை மருத்துவர்களிடம் காண்பிக்க அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் நெப்போலியன். மகனுக்கு ஏற்ற மாதிரியான சூழல் இந்தியாவில் இல்லாத காரணத்தினால் மட்டுமே தான் அமெரிக்காவிற்கு குடிபெயர வேண்டியதாயிற்று என்று தெரிவித்துள்ளார் நெப்போலியன். 

அமெரிக்காவில்  டென்னஸி மாகாணத்தில் தனது குடும்பத்துடன் தற்போது வசித்து வருகிறார். மேலும் ஜீவன் டெக்னாலஜீஸ் என்கிற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை சொந்தமாக தனது மனைவியுடன் இணைந்து நிர்வகித்து வருகிறார். அமெரிக்காவுக்கு சென்றாலும் தன்னுடைய சொந்த விருப்பத்தில் விவசாயமும் செய்து வருகிறார் நெப்போலியன். 

முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அழைப்பு

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் அண்மையில் தனது பட்டப் படிப்பை முடித்தார். படிப்பு முடிந்த கையோடு அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் நெப்போலியன். தனது மகன் திருமணத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண பத்திரிகையை அவருக்கு வழங்கி அழைப்பு விடுத்துள்ளார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெப்போலியனின் மகன் திருமணத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் .  


மேலும் படிக்க : Siragadikka Aasai Serial July 2: ரணகளமாக மாற இருந்த அண்ணாமலை வீடு... கெடுத்துவிட்ட மீனா - சிறகடிக்க ஆசையில் இன்று!

 

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget