மேலும் அறிய

Siragadikka Aasai Serial July 2: ரணகளமாக மாற இருந்த அண்ணாமலை வீடு... கெடுத்துவிட்ட மீனா - சிறகடிக்க ஆசையில் இன்று!

Siragadikka Aasai Today: பாட்டியின் பிறந்தநாள் நல்லபடியாக முடியும் வரையில் வீட்டில் கவரிங் நகை பற்றி பேசாமல் அமைதியாக இருக்கச் சொல்லி சத்தியம் வாங்கிக் கொள்கிறாள் மீனா.

Siragadikka Aasai serial July 2 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாவும் முத்துவும் பாட்டியின் பிறந்தநாளுக்கு செயின் வாங்கி கொடுப்பதற்காக தன்னுடைய நகையை கொடுக்கிறார்கள். ஆனால் கடைக்காரர் அந்த நகை கவரிங் நகை என சொன்னதும் இருவருக்கும் பயங்கரமான அதிர்ச்சியாக இருக்கிறது. முத்துவுக்கு கோபம் வந்து கடைக்காரர்கள் தான் நகையை கவரிங் நகையாக மாற்றி விட்டார்கள் என சத்தம் போடுகிறான். அதற்குள் நகைக் கடையின் உரிமையாளர் வந்து விடுகிறார். மீனாவை ஏற்கெனவே தெரியும் என்பதால் பொறுமையாக விசாரித்து போலீசுக்கு எல்லாம் போன் செய்ய வேண்டாம் என அனுப்பி வைக்கிறார். 

Siragadikka Aasai Serial July 2: ரணகளமாக மாற இருந்த அண்ணாமலை வீடு... கெடுத்துவிட்ட மீனா - சிறகடிக்க ஆசையில் இன்று!

"முத்து: நான் அப்பாவுக்கு போன் பண்ணி இந்த விஷயத்தை சொல்ல போறேன். இந்த திருட்டு வேலையை எல்லாம் அந்த வெட்டிப் பய மனோஜ் தான் செய்வான். அம்மாவை ஏமாத்தி இப்படி செய்து இருப்பான். நீ வீட்டுக்கு கிளம்பு. அவன் கடையில் தான் இருப்பான். நாலு சாத்து சாத்தி அவன் வாயில் இருந்து உண்மையை சொல்ல வைக்குறேன்" என்கிறான்.

"மீனா: கொஞ்சம் பொறுமையா இருங்க. பாட்டி அவங்களோட 80வது பிறந்தநாளை நம்ம எல்லார் கூடவும் சந்தோஷமா கொண்டாட தான் இங்க வராங்க. அவங்க வரும் போது வீட்டில் பிரச்சினை வேணாம். இப்போ தான் ரூம் பிரச்சினை இல்லாமல் வீடு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. அவங்க வர சமயத்துல வீட்டில் இப்படி ஒரு விஷயம் நடந்ததுன்னு தெரிஞ்சா அவங்க ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க. அவங்க இந்த பங்க்ஷன் முடிஞ்சு ஊருக்கு கிளம்புற வரைக்கும் கொஞ்சம் உங்க கோபத்தை கொஞ்சம் தள்ளி வைச்சுட்டு பொறுமையா இருங்க. நீங்க எதுவும் பிரச்சினை பண்ண மாட்டேன் என என் மேல சத்தியம் பண்ணுங்க" என்கிறாள். 

அண்ணாமலை, ரவி மற்றும் ஸ்ருதி பலூன் எல்லாம் ஊதி வீட்டை அலங்காரம் செய்கிறார்கள். மனோஜ் எனக்கு அது எல்லாம் தெரியாது என ஒதுங்கி கொள்கிறான். அண்ணாமலை ரோகிணியை ஸ்ருதிக்கு உதவி செய்ய சொல்கிறார். மீனாவும் முத்துவும் நகையை எடுத்துக்கொண்டு எங்கே போனார்கள் என தெரியாமல் ஒரே படபடப்பாக வாசலையே பார்த்துக் கொண்டு நிற்கிறாள் விஜயா. அந்த நேரத்தில் மீனாவும் முத்துவும் வீட்டுக்கு வருகிறார்கள். 

“ஸ்ருதி: பாட்டிக்கு பரிசு வாங்க தானே நீங்க வெளியே போனீங்க? என்ன சர்ப்ரைஸ் கிப்ட்டா?” எனக் கேட்கிறாள். 

முத்துவை அண்ணாமலை பலூன்களை ஊத சொல்ல, முத்து கோபத்தில் பலூனை பெரிசாக ஊதி உடைத்துவிடுகிறான். அவன் டென்ஷனாக இருப்பதைப் பார்த்த அண்ணாமலை என்ன நடந்தது என விசாரிக்க அவரை சமாதானம் செய்து வைக்கிறான் முத்து.

Siragadikka Aasai Serial July 2: ரணகளமாக மாற இருந்த அண்ணாமலை வீடு... கெடுத்துவிட்ட மீனா - சிறகடிக்க ஆசையில் இன்று!

ரோகிணிக்கு கிரிஷ் போன் செய்து பேசுகிறான். அதைப் பார்த்த மனோஜ் ரோகிணியிடம் விசாரிக்க, அவள் வழக்கம் போல ஏதோ கதை சொல்லி மனோஜை சமாளித்து விடுகிறாள். 

"ரோகிணி: பாட்டிக்கு நாம ஒரு மோதிரம் பரிசா கொடுக்கலாமா?

மனோஜ்: அதெல்லாம் தேவை இல்லை. ஒரு புடவை வாங்கி கொடுக்கலாம் அது போதும்" என்கிறான். 

ஸ்ருதியும் ரவியும் பாட்டிக்கு என்ன கிப்ட் பண்ணலாம் எனப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஸ்ருதி ஒரு காஸ்ட்லியான போன் வாங்கி கொடுப்பதாக சொல்கிறாள். ரவி பாட்டியாக வித்தியாசமான ஒரு கேக் செய்து அசத்தப்போவதாக சொல்கிறான். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.  

தலைப்பு செய்திகள்

இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Embed widget