ஐஸ் கிரீம்க்கு அடித்துக் கொண்ட நடிகர் நகுல் குடும்பம்... க்யூட் வீடியோ இதோ!
நெட்டிசன்கள் ரசிக்கும் நகுல் குழந்தையின் க்யூட் வீடியோ
நடிகை தேவையானியின் இளைய சகோதரரான நகுல், இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். துவக்கத்தில் பருமனாக இருந்த நகுல், தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றிக்கொண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தில் கதாயகனாக நடித்தார். அந்தப் படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தொடர்ந்து கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , செய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது வாஸ்கோடகமா என்ற படத்தில் நடித்து வருகிறார் நகுல். நடிகர் நகுல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். எதிர் காலத்தில் 'எரியும் கண்ணாடி' மற்றும் 'வாஸ்கோடகாமா' என இரண்டு படங்கள் நகுல் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன. ’டான்ஸ் vs டான்ஸ்’, ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 7’ , ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 8’ , ’பிக்பாஸ் ஜோடிகள்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார். தான் நீண்ட காலமாக காதலித்து வந்த தனது காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பாய்ஸ் படத்தில் நடித்து இருந்தாலும், தோழியே என் காதலியா என பாடிக்கொண்டே காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் பிரபலமானவர் நகுல். நடிகர் நகுல் இன்ஸ்டாவில் படு ஆக்டிவ். இவரும் இவரது மனைவி சுருதியும், போட்டி போட்டுக்கொண்டு அவர்களின் குழந்தைகள் வீடியோக்களை ஷேர் செய்வர்.
நகுலுக்கு அக்கீரா என்ற பெண் குழந்தையும் அமோர் என்ற ஆண் குழந்தை உள்ளது. இப்போது, நக்குலின் முதல் குழந்தை அக்கீராவின் க்யூட்டான வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் பலர் ரசித்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்த வீடியோவில், ஐஸ் சாப்பிட்டு கொண்டு இருந்த நகுலை பார்த்து , ஐஸ் வேண்டும் ஐஸ் வேண்டும் என குழந்தை அக்கீரா கேட்க, நகுல் ஐஸ்-ஐ கொடுத்தார். பின்பு, அக்கீராவிடம் ஐஸ் கேட்ட இவரை குழந்தை எட்டி உதைத்தது. பிறகு அவர் அம்மா சுருதியிடம் ஐஸ்-ஐ சாப்பிட கொடுத்தது.
View this post on Instagram
முன்னதாக குழந்தை அகீராவின் பிறந்தநாள் வீடியோவை நகுலும் சுருதியும் பகிர்ந்து இருந்தனர். அந்த பதிவில் பல பிரபலங்கள் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.