மேலும் அறிய

Mammootty : ஹேமா கமிட்டியை வரவேற்கிறேன்... கேரள பாலியல் சர்ச்சை குறித்து மெளனம் கலைத்த மம்மூட்டி..

மலையாள நடிகர்களின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் மோகன்லாலை தொடர்ந்து நடிகர் மம்மூட்டி கருத்து தெரிவித்துள்ளார்

ஹேமா கமிட்டி குறித்து நடிகர் மம்மூட்டி 

மலையாள திரையுலக ஆண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே உலுக்கி இருக்கின்றன. இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஹேமா அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து கேரள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் மோகன்லால் உட்பட அவரது தலைமையில் இருந்த 17 நபர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.

மேலும் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி இந்த சர்ச்சை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடிகர் மோகன்லால் நேற்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

ஹேமா கமிட்டியை ஆதரிப்பதாகவும்.பாலியல் புகார்களால் நடிகர்கள் சங்கமான அம்மா மீது அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் பதவியை ராஜினாமா செய்துவிட்டாலும் சங்கத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக மோகன்லால் தெரிவித்தார். 

மெளனம் கலைத்த மம்மூட்டி 

மோகன்லாலைத் தொடர்ந்து தற்போது நடிகர் மம்மூட்டியும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “ ஹேமா கமிட்டியை ஆதரிப்பதாகவும் , மலையாள திரையுலகில் அதிகார மையம் என்று இல்லை . பாலியல் புகார்கள் குறித்து அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும்" என மம்மூட்டி தெரிவித்துள்ளார்.

 மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகிய இரு நடிகர்களும் இந்த பிரச்சனை குறித்து தெளிவாக பதிலளிக்காமல் மேலோட்டமான பதில் கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

ஹேமா கமிட்டி

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் நடிகர் திலீப் குமாரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக இந்த இந்த குழு விசாரணை செய்தது.

விசாரணை அறிக்கையை கடந்த 2019 ஆம் ஆண்டு கேரள அரசிடம் சமர்பிக்கப்பட்ட பின்பும் இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. சமீபத்தில் WCC என்கிற பெண்கள் அமைப்பின் மூலம் இந்த அறிக்கையின் முடிவுகளை வெளியிட கேரள அரசுக்கு வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நடிகைகளின் பெயர்கள் நீங்க இந்த அறிக்கையின் சில பகுதிகள் வெளியிடப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர்கள் சித்திக் , ஜேயசூர்யா , முகேஷ் , இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். குற்றம் சுமத்தப்பட்ட 10க்கும் மேற்பட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளது கேரள காவல் துறை. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
Embed widget