மேலும் அறிய

Madhan Bob: ஆளு பாத்துதான் சாவுக்கு கூட போவீங்களா? மதன்பாப் மறைவிற்கு வராத பிரபலங்கள் - கோபத்தில் ரசிகர்கள்

மதன்பாப் மறைவிற்கு பிரபல நடிகர்கள் யாரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மதன்பாப். தனது சிரப்பாலே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மதன்பாப் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மறைந்தார் மதன்பாப்:

நடிகராக மட்டுமின்றி மிமிக்ரி கலைஞர், இசையமைப்பாளர், குத்துச்சண்டை வீரர், கத்திச்சண்டை வீரர் என்று பன்முகத் திறன் கொண்டவர். ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மானே இவரிடம் இருந்து ஏராளமான இசை நுணுக்கங்களை கற்றுக் கொண்டுள்ளார்.

மறைந்த மதன்பாப் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. 71 வயதான மதன்பாப் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

இயக்குனர்கள், நகைச்சுவை நடிகர்கள் நேரில் அஞ்சலி:

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மதன்பாப் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, சந்தானபாரதி, கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், நாஞ்சில் அன்பழகன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர், நடிகர்கள் பூச்சி முருகன், ஒய்ஜி மகேந்திரன், எஸ்வி சேகர். நிழல்கள் ரவி, மதுரை முத்து, அனுமோகன், விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

பிரபலம் என்றால் அஞ்சலி செலுத்தக்கூடாதா?

மதன்பாப் 1984ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை தமிழில் மட்டும் 187 படங்கள் நடித்துள்ளார் மதன்பாப். ரஜினி, கமல், விஜய், அஜித், பிரசாந்த், அர்ஜுன், பிரசாந்த், கார்த்திக் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் உழைப்பாளி படத்திலும், கமல்ஹாசனுடன் தேவர்மகன், தெனாலி, நம்மவர் ஆகிய படங்களிலும், விஜய்யுடன் பூவே உனக்காக, பிரியமுடன், மின்சார கண்ணா, அஜித்துடன் ஆசை, பகைவன், சூர்யாவுடன் நேருக்கு நேர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும், பிரசாந்த், பிரபுதேவா, பார்த்திபன், கார்த்திக், விக்ரம், மாதவன், முரளி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் அனைத்து பிரபல நடிகர்களுடன் மதன்பாப் இணைந்து நடித்தும் அவருக்கு இயக்குனர்கள், சக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்கள் மட்டுமே நேரில் அஞ்சலி செலுத்தினர். 

ரசிகர்கள் கடும் கோபம்:

பிரபல நடிகர்களாக தமிழ் சினிமாவில் உலா வரும் யாரும் நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை உண்டாக்கியுள்ளது. பிரபலம் என்றால் இறப்பிற்கு நேரில் வரக்கூடாது என்று சட்டம் உள்ளதா? என்றும், சக நடிகரின் உயிரிழப்பிற்கு கூட நேரில் வராதா? இரங்கல் தெரிவிக்காதாவர்களுக்கு எதற்கு இந்த பிரபல அந்தஸ்து என்றும் மக்கள் கேள்வி எழுப்பினர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Happy Raj Review : அபாஸ் கம்பேக்..நடிப்பில் மிரட்டு ஜார்ஜ் மரியம்..ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் விமர்சனம்
Happy Raj Review : அபாஸ் கம்பேக்..நடிப்பில் மிரட்டு ஜார்ஜ் மரியம்..ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் விமர்சனம்
முதல்வர் சீட் கிடைக்காது என்று தெரிந்ததும் விஜய் போட்ட மாஸ்டர் ப்ளான்..ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!
முதல்வர் சீட் கிடைக்காது என்று தெரிந்ததும் விஜய் போட்ட மாஸ்டர் ப்ளான்..ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!
சென்சார் பிரச்சனையால் தள்ளிப்போகும் எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ்...வெறியான விநியோகஸ்தர்கள்!
சென்சார் பிரச்சனையால் தள்ளிப்போகும் எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ்...வெறியான விநியோகஸ்தர்கள்!
சிலம்பரசனைத் தொடர்ந்து யூத் படக்குழுவைப் பாராட்டிய சூர்யா மற்றும் கார்த்தி
சிலம்பரசனைத் தொடர்ந்து யூத் படக்குழுவைப் பாராட்டிய சூர்யா மற்றும் கார்த்தி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Kamal Haasan: ” கமல் செய்தது தியாகம்” திமுக ஆதரவு அறிவித்த பின் முதல்வரின் உருக்கமான வார்த்தைகள்
MK Stalin on Kamal Haasan: ” கமல் செய்தது தியாகம்” திமுக ஆதரவு அறிவித்த பின் முதல்வரின் உருக்கமான வார்த்தைகள்
MNM quits Election 2026: தொண்டர்களுக்காக தேர்தலில் போட்டியில்லை.. ஆனால் கூட்டணி தர்மம்? ட்விஸ்ட் வைத்த கமல்
MNM quits Election 2026: தொண்டர்களுக்காக தேர்தலில் போட்டியில்லை.. ஆனால் கூட்டணி தர்மம்? ட்விஸ்ட் வைத்த கமல்
DMK DMDK Seat Sharing: திமுக - தேமுதிக இடையே கையெழுத்தான தொகுதி உடன்பாடு; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு.?
திமுக - தேமுதிக இடையே கையெழுத்தான தொகுதி உடன்பாடு; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு.?
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
US Iran War Trump Modi: மத்திய கிழக்கு போர், ஹார்முஸ் பிரச்னை; பிரதமர் மோடியுடன் பேசிய ட்ரம்ப்; இருவரும் விவாதித்தது என்ன.?
மத்திய கிழக்கு போர், ஹார்முஸ் பிரச்னை; பிரதமர் மோடியுடன் பேசிய ட்ரம்ப்; இருவரும் விவாதித்தது என்ன.?
Strait of Hormuz: எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
Duster Vs Kushaq Base Variant: ரெனால்ட் டஸ்ட்ரா.? ஸ்கோடா குஷாக்கா.? அடிப்படை மாடலில் எதில் அம்சங்கள் அதிகம்.? எந்த கார் பெஸ்ட்.?
ரெனால்ட் டஸ்ட்ரா.? ஸ்கோடா குஷாக்கா.? அடிப்படை மாடலில் எதில் அம்சங்கள் அதிகம்.? எந்த கார் பெஸ்ட்.?
GOLD SILVER RATE Mar. 24th: இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
Embed widget