Tharunam: விறுவிறுப்பாக நடைபெறும் ஷூட்டிங்.. தேஜாவு பட இயக்குநருடன் கூட்டணி சேர்ந்த கிஷன் தாஸ்.. பெரும் எதிர்பார்ப்பில் ‘தருணம்’..!
முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கிஷன் தாஸின் இரண்டாவது படம் பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வருகிறது.
முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கிஷன் தாஸின் இரண்டாவது படம் பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வருகிறது.
ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்தை, தேஜாவு படத்தை இயக்கிய இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'தருணம்' என பெயரிடப்பட்டுள்ளது. ஹீரோவாக கிஷன் தாஸூம், ஹீரோயினாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கின்றனர். தருணம் படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தைப் பற்றி நடிகர் கிஷன் தாஸ் கூறும்போது, “நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலிலிருந்தே இந்தப்படத்தைப் பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார். இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி. அவர் இந்தப்படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நடிகை ஸ்மிருதி வெங்கட், “எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு நன்றி. இந்தப்படத்தில் இதுவரை செய்யாத கதாப்பாத்திரம். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்” என கூறினார். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் படம் பற்றிய தகவல்களை தெரிவித்தார். அவர் தனது உரையில், ‘தயாரிப்பாளர் புகழ் 18 வருடங்களாக நெருங்கிய நண்பர். பல காலம் நாங்கள் படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம், எனக்காக என்னை நம்பி எல்லாம் செய்வார். அதனால் கண்டிப்பாக அவருக்கு இது வெற்றிப்படமாக அமையும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘கிஷன், ஸ்மிருதி வெங்கட் பார்ப்பதற்கே புதுமையான மற்றும் இளமையான ஜோடியாக உள்ளது. தருணம் படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கும் நிலையில் அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக சிறப்பாக பண்ணிடலாம் என கூறினார். தேஜாவு பட எடிட்டர்அருள் இ சித்தார்த் தான் இந்தப்படத்திலும் பணியாற்றுகிறார். தேஜாவுவை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக உள்ளது.
தேஜாவு படத்திற்குப் பிறகு மீண்டும் அதுபோன்ற ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் பண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த தருணம் படத்தின் கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். இது கண்டிப்பாக அனைவருக்கும் மைல்கல் படமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.