Kavin Next Movie: சதீஷ்தான் டைரக்டர்.. அயோத்தி ஹீரோயின்.. டாடா கவின் கொடுத்த அப்டேட்..
பிரபல நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் இப்படத்தில் கவின் அடுத்து நடிக்க உள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
![Kavin Next Movie: சதீஷ்தான் டைரக்டர்.. அயோத்தி ஹீரோயின்.. டாடா கவின் கொடுத்த அப்டேட்.. actor kavin joins with choreographer sathish for his next movie preethi asrani anirudh details Kavin Next Movie: சதீஷ்தான் டைரக்டர்.. அயோத்தி ஹீரோயின்.. டாடா கவின் கொடுத்த அப்டேட்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/26/3bb133f3960e5bec8642d077afc5e11c1685084519987574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டாடா பட வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் இன்று (மே.26) தொடங்கியது.
கவனமீர்த்த கவின்!
இந்த ஆண்டு வெளியான டாடா படம், சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணித்து போராடி வந்த நடிகர் கவினுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் கோலிவுட்டின் இளம் கதாநாயகர்களுள் கவனிக்கத்தக்க நடிகராக உருவெடுத்துள்ள கவின், அடுத்ததாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 4 மூலம் பெரும் பிரபலமடைந்தவர் கவின். விஜய் தொலைக்காட்சி வழியே சின்னத்திரையில் கால் பதித்து ஆஃபிஸ், சரவணன் மீனாட்சி தொடர் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர் கவின். அதன் பின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுபொருளாக மாறி, தினந்தோறும் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து பிரபலமானார் கவின்.
டாடா பட வெற்றி
அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், நட்புனா என்னனு தெரியுமா, லிஃப்ட் படங்கள் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்து வளர்ந்து வரும் நடிகராக கவனமீர்த்தார்.
இந்நிலையில், கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ‘பீஸ்ட்’ பட புகழ் அபர்ணா தாஸூடன் கவின் நடித்த டாடா படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி, சைலண்ட் ஹிட் அடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது.
இந்நிலையில் பிரபல நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் இப்படத்தில் கவின் அடுத்து நடிக்க உள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து நடிகராகவும் வலம் வரும் நிலையில் சதீஷ் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாவதை அறிவித்து கோலிவுட் வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
அயோத்தி நடிகை
அதேபோல், நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி பலரது பாராட்டுக்களைப் பெற்ற அயோத்தி திரைப்படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நாயகி ப்ரீத்தி அஸ்ரானி, இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில், இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில், இன்றைய தலைமுறையின் கதையைச் சொல்லும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற உள்ளது.
ஹரீஷ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் நிலையில், எடிட்டராக RC பிரனவ் பணியாற்றுகிறார். சூர்யா ராஜீவன் கலை இயக்கம் செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்க: Seeman: "சீமான் மாமா.. எனக்காக இதை மட்டும் செய்யுங்க..." கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த நடிகை விஜயலட்சுமி..! என்ன நடந்தது?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)