Karthi On Suriya : எங்க அண்ணனுக்கு நடிக்க வரலனு சொன்னாங்க...கங்குவா ஆடியோ லாஞ்சில் எமோஷனலாக பேசிய கார்த்தி
Karthi On Suriya : கங்குவா இசை வெளியீட்டில் பேசிய நடிகர் கார்த்தி சூர்யா நடிக்க வந்தபோது எதிர்கொண்ட சவால்களைப் பற்றி எமோஷனலாக பேசினார்
கங்குவா இசை வெளியீடு
சூர்யாவின் கங்குவா படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யாவின் சகோதரர் கார்த்தி கலந்துகொண்டார். நடிகர் சூர்யா சினிமாவிற்கு வந்த புதிதில் எதிர்கொண்ட அவமானங்களைப் பற்றி நடிகர் கார்த்தி மேடையில் பேசினார். மேலும் கைதி 2 மற்றும் ரோலக்ஸ் படத்தைப் பற்றியும் கார்த்தி பேசினார்.
சூர்யா பற்றி கார்த்தி
"எனக்க அண்ணன் நடிக்கும் ஒவ்வொரு படத்தில் லுக்கை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பாசிட்டிவா இருக்கும். சிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்தபோது இந்த படம் பெரிதாக இருக்கும் என்று தோன்றியது. அதேபோல் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்தபோது அந்த படம் ஒரு ஆசீர்வாதம் என்று தோன்றியது. சிவா சார் இந்த மாதிரியான ஒரு கதை அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. என்ன அண்ணனைப் பற்றி எனக்கு தெரியும். ஆடியன்ஸுக்கு இது போதும் என்று நினைக்கவே மாட்டார். ரசிகர்களுக்கும் இன்னும் அதிகமாக என்ன கொடுக்க முடியும் என்றுதான் நினைப்பார். நான் இன்னைக்கு யோசித்து பார்க்கிறேன். அண்ணாவின் முதல் படத்தில் அவருக்கு நடிக்க தெரியவில்லை என்று சொன்னார்கள், டான்ஸ் ஆட தெரியவில்லை நல்ல பாடி இல்லை என்று சொன்னார்கள். எனக்கு நல்லா தெரியும் தினமும் மூன்று மணி நேரம் பைட் கிளாஸ் டான்ஸ் கிளாஸ் போவார். ஆய்த எழுத்து படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தேன். அந்த படத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சியை அவரே செய்தார், ஃபிட்னஸைப் பொறுத்தவரை இன்று எல்லா ஜிம்மிலும் அவருடைய புகைப்படம் தான் இருக்கிறது. எது நம்மிடல் இல்லை என்று சொல்கிறார்களோ அதை எல்லாம் நம் உழைப்பால் செய்துகாட்ட முடியும் என்பதற்கு நம்ம அண்ணனை விட சிறந்த உதாரணம் வேற யாரும் இல்லை" என்று கார்த்தி பேசினார்