மனைவி இத சிறப்பா செய்வாங்க... காதலுடன் இன்ஸ்டாவில் ஃபோட்டோ பகிர்ந்த கார்த்தி!
இன்ஸ்டாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் கார்த்தி முன்னதாக தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ஃபோட்டோக்களை பகிர்ந்து தன் ரசிகர்களை மகிழ்வித்தார்.
நடிகர் கார்த்தி தன் மனைவி எடுத்த கேண்டிட் புகைப்படத்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் காதலுடன் பகிர்ந்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
”சிறந்த கேண்டிட் புகைப்படங்கள் வாழ்க்கைத் துணைவர்களால் தான் எடுக்கப்படும். ஃபோட்டோ எடுத்தபோது நான் என்ன யோசித்துக் கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. இதை எடுத்தவர் ரஞ்சனி” எனக் குறிப்பிட்டு இந்தப் புகைப்படத்தை கார்த்தி பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
நடிகர் கார்த்தி ரஞ்சனியை கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உமையாள் என்ற பெண் குழந்தையும், கந்தன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
இன்ஸ்டாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் கார்த்தி, முன்னதாக தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை பகிர்ந்து தன் ரசிகர்களை மகிழ்வித்தார்.
View this post on Instagram
கார்த்தி நடிப்பில் விரைவில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.