மேலும் அறிய

Meiyazhagan : மென்மையான மெய்யழகன்! கம்பேக் தருவாரா கார்த்தி? டீசருக்கு செம ரெஸ்பான்ஸ்..

Meiyazhagan Teaser : மென்மையான கதையம்சம் கொண்ட மெய்யழகன் படம் மூலமாக நடிகர் கார்த்தி மீண்டும் கோலிவுட்டில் கம்பேக் தருவாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Meiyazhagan Teaser : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. நடிகர்  சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி கார்த்தி. பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, கைதி, சர்தார் என பல படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

வெற்றிக்கு போராடும் கார்த்தி:

நடிகர் கார்த்திக்கிற்கு கைதி படத்திற்கு பிறகு மிகப்பெரிய வெற்றிப்படம் தமிழில் இதுவரை கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். கடைசியாக வெளியான சர்தார் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. பொன்னியின் செல்வனின் இரண்டு பாங்களுக்கும் கலவையான விமர்சனமே கிடைத்தது.

கடைசியாக குக்கூ இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படம் படுதோல்வியைச் சந்தித்தது. இது கார்த்தி ரசிகர்களுக்கும் ஏமாற்றமான படமாக அமைந்தது. இந்த சூழலில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகனின் டீசர் நேற்று வெளியானது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெய்யழகன்:

ரத்தம், கத்தி, அரிவாள் என்று எதுவும் இல்லாமல் மிகவும் மென்மையான கிராமத்து வாசனையில் வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசர் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாகவே கத்தி, ரத்தம், சண்டை இல்லாமலே முழு நீள திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்த சூழலில், இப்படியொரு படத்தின் டீசர் வெளியாகி இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், கார்த்தி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா மண்ணை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அர்விந்த் சுவாமி இந்த படத்தில் கார்த்திக்கிற்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி, கருணாகரன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிராமத்து கதாபாத்திரத்தில் வெள்ளந்தியான தோற்றத்தில் கார்த்தி நடித்துள்ளார்.  

கம்பேக் தருவாரா கார்த்தி?

ப்ளாக்பஸ்டர் படம் கொடுத்து நீண்ட வருடங்களான கார்த்திக்கிற்கு இந்த படம் கடைக்குட்டி சிங்கம் போல குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 27ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளளனர்.

மேலும், படத்தின் வெளியீட்டு தேதியில் ஆங்கில தேதி மட்டுமின்றி புரட்டாசி 11 என்று தமிழ் தேதியையும் குறிப்பிட்டு படக்குழு அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget