100 Days of Vikram: “மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்”.. “விக்ரம்” படத்தின் 100வது நாளில் கமல் வெளியிட்ட பதிவு
அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் படம் இன்று 100வது எட்டியுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
View this post on Instagram
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் வசூலில் உலகளவில் ரூ.400 கோடிக்கும் வசூலைப் பெற்று சாதனைப் படைத்தது.
View this post on Instagram
நீண்ட நாட்களுக்குப் பின் எந்த வித சுய பரிசோதனையும் இல்லாமல், மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் கமல் நடிப்பில் வெளியான கமர்ஷியல் படம் என்பதால் மக்களும் ஆர்வமாக கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். இதனால் ஒருமாதம் ஆகியும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக விக்ரம் படம் ஓடியது. மேலும் விக்ரம் படத்தின் வெற்றிக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு கார், உதவி இயக்குநர்களுக்கு பைக், நடிகர் சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் என பரிசு வழங்கி மகிழ்ச்சிக்குள்ளாக்கினார் கமல்ஹாசன்.
#100DaysofVikram #VikramRoaringSuccess pic.twitter.com/7SjZIpTB6M
— Kamal Haasan (@ikamalhaasan) September 10, 2022
இந்நிலையில் விக்ரம் படம் வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆகியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நேற்று இரண்டு போஸ்டர்கள் வெளியானது. இன்று நடிகர் கமல்ஹாசன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ”வணக்கம். ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் படம் 100வது நாளை எட்டியிருக்கிறது..மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்..தலைமுறைகளை தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக்கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த உங்கள் ஒவ்வொருவருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷூக்கு என் அன்பும்..வாழ்த்தும்...” என கமல் தெரிவித்துள்ளார். மேலும் விக்ரம் படத்தின் 100வது நாளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.,