மேலும் அறிய

Kamalhassan: தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் மரணம்.. கமல்ஹாசனின் சோகப்பதிவு..

தமிழ் சினிமாவில் தயாரிப்பு துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த நபராக வலம் வந்த  அருண் வீரப்பன் வயது மூப்பால்  காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் சினிமாவில் தயாரிப்பு துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த நபராக வலம் வந்த  அருண் வீரப்பன் வயது மூப்பால்  காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

1960 ஆம் ஆண்டு மறைந்த பழம்பெரும் இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் ‘களத்தூர் கண்ணம்மா’ படம் வெளியானது. ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோரோடு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இன்றைய உலக நாயகன் கமல்ஹாசன். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடல் மிகவும் பிரபலமானது. களத்தூர் கண்ணம்மா படத்தில்  தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் அருண் வீரப்பன். 

 'மைன் சுப் ரஹுங்கி', 'மெஹர்பன்' மற்றும் 'பைசா யா பியார்' போன்ற பல வெற்றிப் படங்களில் தயாரிப்பு துறையில் பணியாற்றிய அவர், விவசாயம், குழந்தைகள் நலம் மற்றும் பிற சமூகத் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களையும் தயாரித்து இயக்கியுள்ளார். கியூப் சினிமா நிறுவனத்தின் தலைவராக இருந்த அருண் வீரப்பன், 1980 ஆம் ஆண்டுகளிலேயே சினிமாவில் பல மின்னனு சாதனைகளை பயன்படுத்தி வெற்றி கண்டவர். இதனால் திரைத்திரையில் இன்றைக்கு இருக்கும் முன்னணி நடிகர்களுக்கும் நன்கு பரீட்சையமானவர். 

அருண் வீரப்பன் ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனர் ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளை ஆவார். சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டில் வசித்து வந்த 90 வயதான அருண் வீரப்பன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தவறி விழுந்து காயமடைந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பிய அவர் நேற்று (ஆகஸ்ட் 27) மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். 

இந்நிலையில் அருண் வீரப்பன் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன். 

நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ‘குழந்தைங்க எப்படி பெருசா வளர்ந்துச்சு?’ : நயன் - விக்கியிடம் வம்பிழுக்கும் நெட்டிசன்கள்.. ஏன் வன்மம்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget