மேலும் அறிய
Advertisement
தானே கதை எழுதி...மலையாள இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்த கமல் ஹாசன்
நடிகர் கமல் ஹாசனின் அடுத்த படத்தை பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கமல் ஹாசன் மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் படி அவர் தற்போது, விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். ராஜ்கமல் ஃபிலிமிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி , பகத் பாசில், அர்ஜூன் தாஸ் , நரேன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாகக் கமல் ஹாசன் ரசிகர்களிடம் மட்டுமின்றி அனைவராலும் ரசித்து பேசப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அங்கு கமல் ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கமல் ஹாசன், இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.
ஏற்கனவே 60 சதவிகிதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் இயக்குநர் சங்கர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, மீதமுள்ள படப்பிடிப்பில் கமல் ஹாசன் கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிலையில் விக்ரம், இந்தியன் 2 ஆகிய படங்கள் முடித்தவுடன் கமல் ஹாசன், தனது அடுத்த பட வாய்ப்பை பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணுக்கு வழங்க இருப்பதாகக் கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் செய்தி உலா வந்தன. ஆனால் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகததால் இந்த செய்தியை நம்பமலா? வேண்டாமா? என அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இதற்கு விடையளிக்கும் விதமாக கமல் ஹாசன் சமீபத்தில் பிரபல மலையாள ஊடகத்திற்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணனுடன் பணியாற்ற உள்ளீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், "ஆம். நான் இயக்குநர் மகேஷ் நாராயணன் படத்தில் நடிக்க உள்ளேன். அந்த படத்தின் கதையை நானே எழுதி வருகிறேன்” என கூறியுள்ளார். இதனை கேட்ட கமல் ஹாசன் ரசிகர்கள் படத்தின் கதை எப்படி இருக்கும், அதில் யார் நடிப்பார்கள் என தெரிந்து கொள்ள தற்போதே ஆவலாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
இயக்குநர் மகேஷ் நாராயணன் கடைசியாக பகத் பாசில் வைத்து இயக்கிய மாலிக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion