Johnny Depp: எல்லாருக்கும் பிடித்த ஜாக் ஸ்பேரோ...நடிகர் ஜானி டெப் பிறந்தநாள் இன்று!
கடற்கொள்ளையன் என்றால் இன்று பெரும்பாலானவர்களுக்கு முதலில் நியாபகத்தில் வருவது பின்னிய தலைமுடியுடன் ஏதாவது கோமாளித் தனம் செய்துகொண்டபடியே கேப்டன் ஜால் ஸ்பேரோவாக தான் இருக்கும்.
ஜானி டெப்
கடற்கொள்ளையன் என்றால் இன்று பெரும்பாலானவர்களுக்கு முதலில் நியாபகத்தில் வருவது பின்னிய தலைமுடியுடன் ஏதாவது கோமாளித் தனம் செய்துகொண்டபடியே கேப்டன் ஜால் ஸ்பேரோவாக தான் இருக்கும். ஜாக் ஸ்பேரோ என்கிற பெயரை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் இருந்து அழிக்கவே முடியாத அளவிற்கு இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் ஜானி டெப்.
பள்ளியை விட்டு வெளியேறிய ஜானி டெப்
தனது 16 வயதில் இசைக்கலைஞன் ஆக வேண்டும் என்று கிட்டாரை தூக்கிக் கொண்டு பள்ளியில் இருந்து வெளியேறினார் ஜானி டெப். இளமைக் காலத்தில் நாம் எல்லாரும் ஏதோ ஒரு ஆசையில் சில முடிவுகளை எடுப்பது உண்டு ஆனால் எதார்த்த உலகம் நம் நம்பிக்கையை மிக எளிதாக சிதறடிக்கக் கூடியது இல்லையா. அந்த மாதிரியான ஒரு நேரத்தில் நமக்கு யாரோ ஒருவர் தோளில் தட்டி ஊக்கப்படுத்த வேண்டியதாக இருக்கிறது. இசைக் கலைஞராக வேண்டும் என்கிற கனவில் பண்ணியை விட்டு ஜானி டெப் தான் தவறான முடிவை எடுத்துவிட்டோம் என்று நினைத்து அடுத்த சில நாட்களில் தன் பள்ளிக்கு திரும்பிச் சென்றார். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அவரது ஆசிரியர் உன் கனவை பின்பற்று என்று தைரியம் சொல்லி ஜானியை ஊக்கப்படுத்தி இருக்கிறார்.
தனது ஊரிலேயே சின்ன பாண்ட் ஒன்றை உருவாக்கி தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார் ஜானி. இதே பாண்டில் இருந்த தனது நண்பனின் தங்கையான் ஆலிசனை தனது 20 வயதில் திருமணமும் செய்துகொண்டார்.
சினிமா என்ட்ரி
ஆலிசன் தான் ஜானியை நிகோலஸ் கேஜ் என்கிற நடிகையை அறிமுகப்படுத்தினார். ஜானியை சினிமாவில் நடிக்க ஊக்கப்படுத்தியவர் நிகோலஸ் கேஜ். தொடன்ர்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜானி டெப் அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து அன்றைய இளம் தலைமுறையிடம் கவனமீர்த்தார். பைரேட்ஸ் ஆஃப் தி கரிபீயன் படம் ஜானி டெப் கரியரில் மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் ஜாக் ஸ்பேரோ என்கிற அவரது கதாபாத்திரம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப் பட்டது. தொடர்ந்து சார்லீயும் சாக்லேட் ஃபாக்டரியும் , ஃபேண்டாஸ்டிக் பீஸ்ட் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை எடுத்து நடித்து தான் ஒரு கமர்ஷியல் நடிகர் மட்டுமில்லை என்பதை நிரூபித்தார்.
சர்ச்சைகள்
தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஜானி டெப் மீது அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹர்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த சம்பத்தைத் தொடர்ந்து ஜானியின் சினிமா கரியர் பெரியளவில் பாதிக்கப்பட்டது. பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தில் இனிமேல் ஜானியை நடிக்க வைக்கப் போவதில்லை என்று வால்டு டிஸ்னி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மற்ற படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்து ஜானி டெப் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டது. ஒரு காலத்தில் ஹாலிவுட் திரையுலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்த ஜானி டெப் தனது வாழ்க்கையின் கனிசமான காலத்தை குற்றவாளியாக கடத்தியிருக்கிறார். தற்போது மீண்டும் அதே ஜாக் ஸ்பேரோவாக மீண்டும் திரைக்கு திரும்ப தயாராகி வருகிறார் ஜானி டெப்.