”உங்களைப்போல இருக்க முயற்சி செய்கிறோம்” - பெற்றோரின் திருமண நாளுக்கு துல்கர் சல்மானின் நெகிழ்ச்சி..

துல்கர் சல்மான் மற்றும் மம்மூட்டி பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன

FOLLOW US: 

மலையாள சினிமாவின் "சூப்பர் ஸ்டார் "என்று அழைக்கப்படுபவர் மம்முட்டி , இவருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமல்லாது, இவரின் ரசிகர்களும் "மம்முக்கா " என்று இவரை செல்லமாக அழைப்பதுதான் வழக்கம் .  மம்முட்டி 1979-ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி சுல்ஃபத் குட்டி  என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதிகள் நேற்று தங்களது  42 வது திருமண நாளை கொண்டாடினர். இதுகுறித்து  மம்முட்டியின் மகனும், மலையாள சினிமாவின்  முன்னணி நடிகருமான துல்கர் சல்மான்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் மம்முட்டி மற்றும் சல்ஃப்டா ஆகியோரின்  புகைப்படம் ஒன்றினை பகிர்ந்து " இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா அப்பா , இந்த புகைப்படம் கடந்த வருடம் எடுத்ததுபோல் உள்ளது, உங்கள் இருவரை போல இருக்க நாங்கள் முயற்சி செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவிற்கு கீழே  மம்முட்டியின் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக நடிகர் மனோஜ் கே ஜெயன் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதேபோல் நடிகை அபர்ணா கோபிநாத், பிரித்திவி ராஜ் மனைவி சுப்ரியா மேனன் உள்ளிட்ட பல திரைப்பிலங்கள் மம்முட்டி தம்பதிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர் .

நடிகர் துல்கர் சல்மானுக்கு திருமணமாகி மரியா என்ற பெண் குழந்தை உள்ளது. மரியாவும் தனது பிறந்த நாளை கடந்த 5-ஆம் தேதி கொண்டாடினார். மகள் மரியாவின் பிறந்த நாள் குறித்த ஒரு பதிவினையும் , அவருடன் இருப்பது போன்ற  க்யூட்டான புகைப்படம் ஒன்றினையும் நடிகர் துல்கர் சல்மான் பகிர்ந்திருந்தார். இதே போல் மம்முட்டியும் தனது பேத்தி புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். மரியாக்குட்டிக்கும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.அவர்கள் பகிர்ந்த  இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் துல்கர் சல்மாமன்  வாயை மூடி பேசவும் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் , அதன் பிறகு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதே போல துல்கர் நடிப்பில் வெளியான " கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் "  திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் மம்முட்டி மற்றும் துல்கர்  இருவரும் , முதல் முறையாக மலையாள  திரைப்படத்தில் இணைய இருக்கிறார்கள் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Dulquer Salman mammooty mammooty family mamooty and dulquer dulquer salman family dulquer wishes dulquer daughter

தொடர்புடைய செய்திகள்

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

டாப் நியூஸ்

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!