Actor Dhanush: மகன்களுடன் அதிகாலையிலேயே அண்ணாமலையாரை தரிசித்த தனுஷ்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்தார்.

உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாகும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக உள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்வார்கள். அதேபோன்று நடிகர்கள், இயக்குனர்கள் என அனைவரும் தங்கள் படப்பிடிப்பிற்கு முன்பாக அண்ணாமலையார் கோயிலில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு பின்பு படப்பிடிப்பு துவங்குவார்கள். பின்னர் படம் முடிந்த பிறகு அண்ணாமலையார் கோயிலில் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் பிரபல திரைப்பட நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
நடிகர் தனுஷ் சாமி தரிசனம்
இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மகன்கள் ஆகியோருடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அதிகாலையில் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் சன்னதியில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கழுத்தில் மற்றும் கையிலும் ருத்ராட்சைத்தை எடுத்துக் சாமி சன்னதியை சுற்றி வந்தார். மேலும் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகாலையில் சாமி தரிசனம் மேற்கொண்ட தனுஷ் காண பக்தர்கள் முண்டியடித்து சென்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

