Dhanush: ராயனுக்கு அமோக வரவேற்பு.. ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்ட தனுஷ் - வைரலாகும் வீடியோ
சென்னை ரோகிணி திரையரங்கில் ராயன் படம் பார்க்க சென்ற நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
![Dhanush: ராயனுக்கு அமோக வரவேற்பு.. ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்ட தனுஷ் - வைரலாகும் வீடியோ Actor Dhanush watching raayan movie at chennai rohini theatre video goes viral Dhanush: ராயனுக்கு அமோக வரவேற்பு.. ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்ட தனுஷ் - வைரலாகும் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/26/057ce2a0acd36ca766300057827792a41721988919067572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராயன்
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி , துஷாரா விஜயன் , எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள ராயன் படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.
ராயன் முதல் நாள் வசூல்
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராயன் படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது. முதல் நாளுக்காக முன்பதிவுகளில் மட்டுமே ராயன் படம் 6.20 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளில் இந்தியளவில் படம் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் படங்களில் இதுவரை அதிக வசூல் ஈட்டிய படமாக கர்ணன் படம் இருந்து வரும் நிலையில், தற்போது ராயன் படம் இந்த வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளபோது அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராயன் கதை
காத்தவராயன் (தனுஷ்) முத்துவேல் ராயன் (சந்தீப் கிஷன்) மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்) ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா (துஷாரா விஜயன்). சின்ன வயதில் தங்கள் பெற்றோரால் கைவிடப்படும் இவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். மூத்தவரான காத்தவராயன் ( தனுஷ்) தன் தம்பி தங்கச்சியின் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர்
மறுபக்கம் சென்னையின் பிரபல ரவுடியின் மகன் சேது ( எஸ்.ஜே சூர்யா) தனது தந்தையைக் கொன்ற துரையை (சரவணன்) எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் எப்படியாவது மோதலை ஏற்படுத்தி அவர்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார் போலீஸாக வரும் பிரகாஷ் ராஜ். இந்த கொலைகார கும்பலிடம் இருந்து ராயன் தனது குடும்பத்தை காப்பாறினாரா?. ஒருவேளை ராயன் உயிருக்குயிராக நினைக்கும் அவன் தம்பிகள் அவனுக்கே எதிராக திரும்பினால்? ஆக்ஷன் எமோஷன் என தொடர்கிறது ராயன் படத்தின் கதை...
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்
Dhanush watching #Raayan FDFS with Audience at Rohini Cinemas💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) July 26, 2024
pic.twitter.com/wZouYEZoU0
ராயன் படத்தை ரசிகர்களுடன் பார்க்க நடிகர் தனுஷ் இன்று சென்னை ரோகிணி திரையரங்கம் சென்றார். அப்போது தனுஷைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பிற்கு நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)