அம்மாடியோவ் 150 கோடில கனவு வீடா...தனுஷின் புதிய கனவு இல்லம் பாதி ரெடி!
Dhanush Dream House : 150 கோடி ருபாய் செலவில் தனது கனவு இல்லத்தை கட்டி வருகிறார் நடிகர் தனுஷ். போயஸ் கார்டன் சூப்பர் ஸ்டார் வீட்டின் அருகே பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது இந்த கனவு இல்லம்.

Dhanush dream house : தனுஷ் கட்டும் புது வீட்ல இவ்வளவு வசதிகள் இருக்கா...150 கோடி செலவில் உருவாகும் கனவு இல்லம்
தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் தனது இயல்பான தோற்றம், எதார்த்தமான நடிப்பு, அசத்தலான நடனம் என அனைத்து அம்சங்களிலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் தூள் கிளப்பி வருகிறார் தனுஷ்.
View this post on Instagram
பிரமாண்டங்கள் நிறைந்த கனவு இல்லம்:
பொதுவாகவே அனைவருக்குமே கனவு இல்லம் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று நிறைய ஆசைகள் இருக்கும். அதே போல் நடிகர் தனுஷ் தனது கனவு இல்லம் ஒன்றை கட்டவிருக்கிறார் என்பது ஏற்கனவே கேள்விப்பட்ட ஒரு விஷயம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருமகன் தனுஷ் போயஸ் கார்டெனில் அவரின் வீட்டருகே ஒரு நிலத்தை வாங்கி அதில் தனது கனவு இல்லத்தை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இன்று ஒரு நான்கு அடுக்கு கட்டிடமாக எழும்பியுள்ளது. சென்ற ஆண்டு அந்த இடத்தில பூமி பூஜைகள் சூப்பர்ஸ்டார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. அந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அந்த சமயத்தில் மிகவும் வைரலாக பரவின. அதற்கு பிறகு அந்த கனவு இல்லம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
150 கோடி ருபாய் செலவில் கட்டப்பட்டுவரும் கட்டிடம்:
தற்போது தனுஷின் கனவு இல்லம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வீடு பல கோடி ருபாய் செலவு செய்து கட்டப்பட்டு வருகிறது. ஏராளமான பிரமாண்டங்கள் நிறைந்த அந்த வீட்டின் பாதி கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. இந்த பங்களாவில் விசாலமான கார் பார்க்கிங், குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்க்க பெரிய ஹோம் தியேட்டர், ஜிம், நீச்சல் குளம், லிப்ட், சென்ட்ரலைஸிட் ஏசி. சுமார் 150 கோடி செலவில் இந்த வீடு கட்டப்பட்டு வருகிறது என்பது தான் தற்போது கிடைக்கப்பட்டுள்ள புதிய தகவல்.
View this post on Instagram
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி:
நடிகர் தனுஷ் தனது கனவு இல்லத்திற்கு தேவையான ஒவ்வொரு பொருளையும் அவராகவே தேர்வு செய்து வருகிறாராம். வீட்டின் அலங்கார பொருட்கள் பலவற்றையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறாராம். டைல்ஸ், லைட் முதற்கொண்டு இன்டீரியர் ஒர்க் செய்ய தேவையான அனைத்தையும் அவரே முடிவு செய்து வருகிறாராம்.
விரைவில் இந்த கனவு இல்லத்தின் கிரஹப்பிரவேசம் விழா நடைபெறவிருக்கிறது. அதற்கு திரை பிரபலங்கள் அனைவர்க்கும் அழைப்பு வைக்க இருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்த பிரமாண்டமான விழா நடைபெறும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

