10 Years Of Raanjhanaa: தனுஷின் பாலிவுட் எண்ட்ரீ .. தமிழ் ரசிகர்களை கவர்ந்த இந்தி படம்.. 10 ஆண்டுகளை நிறைவு செய்த ‘ராஞ்சனா’..!
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ராஞ்சனா. ராஞ்சனா திரைப்படத்தின் வழியாக பாலிவுட் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார் தனுஷ்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ராஞ்சனா. ராஞ்சனா திரைபபத்தின் வழியாக பாலிவுட் திரையுலகிற்க்குள் அடியெடுத்து வைத்தார் தனுஷ். பாலிவுட்டில் அவர் நடித்த முதல் படமே 100 கோடி வசூல் படைத்தது. தமிழில் அம்பிகாவதி என்கிறப் பெயரில் இந்தப் படம் வெளியானது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ராஞ்சனாவின் கதை
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட காசியில் செட்டிலான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குந்தன் (தனுஷ்) என்கிற கதாநாயகன் ஜோயா (சோனம் கபூர்) என்கிற இஸ்லாமியப் பெண்ணைக் காதலிக்கிறான்.காதல் என்றால் சாதாரணக் காதல் இல்லை. ஒரு சாமானியன் காதல் வந்தால் என்னவெல்லாம் செய்வானோ அதை தான் செய்கிறார் நமது கதாநாயகனும். என்னவெல்லாம் தெரியுமா?
தினமும் நேரத்திற்கு சென்று ஜோயாவிடம் ஒரு அறை வாங்குவது. ஓடும் ஆட்டோவை துரத்திச் சென்று அதில் ஏறிக்கொண்டு காதலிக்கச் சொல்லி மிரட்டி மணிக்கட்டை அறுத்துக்கொள்வது, அவளுக்காக தனது இந்துப் பெயரை மாற்றி இஸ்லாமியப் பெயரை வைத்துக் கொள்வது, வார்த்தைகள் புரியாத கவிதைகளை மனப்பாடம் செய்வது, ஓடும் ரயிலைத் துரத்தி விழுந்து எலும்புகளை உடைத்துக்கொள்வது., அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு தன்னை பிடிக்க வைக்க வீட்டு வேலைகளை செய்வது. அவளுக்குப் பிடிக்காமல் ஏற்பாடு செய்யபபடும் திருமணத்தை தனது நண்பர்களை படாதபாடு படுத்தி நிறுத்துவது என செய்கிறார்.
மேலும், தன்னை உயிருக்கு உயிராக காதலிக்கும் ஒரு பெண்ணின் காதலை உதாசீனம் செய்வது,
வேறு ஒருவனை காதலிப்பதாக தனுஷிடம் சோனம் கபூர் சொல்லும்போது ஓட்டிக்கொண்டிருக்கும் ஸ்கூட்டரை கங்கை ஆற்றில் விடுவது.
அவளைப் பழிவாங்க தானும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுப்பது,
தனது திருமண நாளன்று மூலையில் அமர்ந்து கதறி கதறி அழுவது,
தனது கல்யாணத்தை விட்டு ஓடுவது.தான் காதலிக்கும் பெண்ணின் கல்யாணத்தில் சென்று அதை நிறுத்துவது,
பின் மீண்டும் அவளை அவன் காதலனுடன் சேர்த்து வைத்து தியாகியாக முயல்வது,
தான் செய்த தவறால் நிகழ்ந்த பாவத்தை துடைக்க தேசாந்திரியாகத் திரிவது. மீண்டும் அவளிடம் சென்று அவள் காலடியில் சரணடைவது,
அவளது லட்சியத்தை தன்னுடையதாக நினைத்து அதற்காக உழைப்பது,
தெரு நாய் என்று அவள் விரட்டும்போது மெளனமாக தலை குணிந்து நிற்பது,
இறுதியாக அவளுக்காக துப்பாக்கி குண்டை வாங்கி அவள் அருகாமையில் இறந்துபோவது.
கொஞ்ச காலம் ஓய்வுக்குப் பின் மீண்டும் பிறந்து.
சிறுவனாக கங்கை ஆற்றங்கரையில் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஜோயா என்கிற அந்தப் பெண்ணைக் கண்டு அவள் மேல் மீண்டும் காதல் கொள்வது என தொடரும் இந்த ராஞ்சனாவின் கதை. இது தமிழில் அம்பிகாபதி என்னும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
Raanjhanaa / Ambikapathy
— தோழர் ஆதி (@RjAadhi2point0) November 29, 2022
I had Problems Politically,Portrayal wise and As a Movie too.. But the Film is so close to my heart.. It could've been made better but Some scenes were written and Executed so well..
ARR's Music, D's Acting, Dialogs (Tamil Dub Too 😍) and Climax were ❤️ https://t.co/d3E9EupPmZ pic.twitter.com/YmSxp2TuVS