Watch Video : பியானோவில் விளையாடும் தனுஷ்...இளையராஜாவின் அந்த பாடலை இசைத்து அசத்திட்டார்
ஹே ராம் படத்தில் இளையராஜாவின் நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி பாடலை நடிகர் தனுஷ் இசைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது

தனுஷ்
நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை படப்பிடிப்பை முடித்துள்ளார். தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் அவர் நடித்துள்ள குபேரா படமும் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. அடுத்தபடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.
கடந்த சில மாதங்களாக தமிழி சினிமாவில் பேசுபொருளாக இருந்து வருகிறார் தனுஷ். நயன்தாரா உடனான என்.ஓ.சி சர்ச்சை , மனைவி ஐஸ்வர்யாவுடனான விவாகரத்து என தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர் சவால்களை கொண்டுள்ளது. இதை எல்லாம் ஆர்பாட்டமே இல்லாமல் சைலண்டாக டீல் செய்து வருகிறார் தனுஷ். இதனிடையில் திருச்சிற்றம்பலம் படத்திற்காக தனுஷூக்கு நியூஸ் 18 சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கெளரவித்தது.
பியானோ வாசிக்கும் தனுஷ்
நடிகர் தனுஷின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷூக்கு பியானோ வாசிப்பதில் ஆர்வம் அதிகம். 3 படத்தில் போ நீ போ பாடலை பியானோவில் வாசித்து ரசிகர்களை கவர்ந்தார். அதேபோல் இந்த வீடியோவில் ஹே ராம் படத்தின் நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி பாடலை பியானோவில் வாசித்துள்ளார் தனுஷ். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
The mesmerizing "nee partha"
— Dhanush Trends ™ (@Dhanush_Trends) December 6, 2024
by @dhanushkraja will touch your heart ❤️pic.twitter.com/BAtlUziA3u
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

