Kuberaa Review : தனுஷின் குபேரா காப்பாற்றியதா ? கைவிரித்ததா ? முழு விமர்சனம் இதோ
Kuberaa Movie Review : தனுஷ் ,நாகர்ஜூனா ,ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ள குபேரா படத்தின் விமர்சனத்தை இங்கேப் பார்க்கலாம்

குபேரா
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ,நாகர்ஜூனா ,ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ள குபேரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குபேரா படத்தில் அதிகாலை சிறப்பு காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில் ரசிகர்கள் படத்தின் விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். எல்லா பக்கத்தில் இருந்தும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. குபேரா படத்திற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் என்ன விமர்சனங்களை வழங்கியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
குபேரா விமர்சனம்

"கதை கொஞ்சம் நிதானமாக தொடங்கினாலும் அடுத்தடுத்த காட்சிகள் வேகமெடுக்கிறது. இயக்குநர் சேகர் கம்முலா தனது தனித்துவமான ஸ்டைலில் எமோஷன் மற்றும் த்ரில் கலந்து படத்தை நகர்த்திச் செல்கிறார். எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. படத்தின் நீளம் ஒரு குறை என்றாலும் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை கதையின் சுவாரஸ்யம் குறைவதில்லை " என ஒரு விமர்சனம் கூறியுள்ளார்
#Kuberaa - A meaningful story with soul and substance.
— Vishnu’s CineLens (@VishnuR51492912) June 20, 2025
The movie starts off a bit slow but becomes engaging after Dhanush’s entry and keeps the interest alive till the end. Dhanush delivers one of his best performances as a beggar. Devi Sri Prasad’s emotional background score… pic.twitter.com/3Ic8GegAP1
எந்த நடிகரும் செய்யாததை செய்த தனுஷ்
குபேரா படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவாக தனுஷின் நடிப்பு கருதப்படுகிறது "எந்த நடிகரும் நடிக்க துணியாததை தனுஷ் நடித்திருக்கிறார். குறிப்பாக ஓப்பனிங காட்சி. தனுஷின் மொத்த கரியரில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் " என ரசிகர்கள் தனுஷின் நடிப்பை வியந்து பாராட்டி வருகிறார்கள்.
"தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தவா இடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்துள்ளது. நடிப்பிற்காக தனுஷ் நிச்சயம் பல விருதுகளை தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கலாம். தேவிஶ்ரீ பிரசாதின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலல் சேர்க்கிறது" என மற்றொரு ரசிகர் கூறியுள்ளார்.





















