Actor Dhanush : அடுத்த வேட்டைக்கு தயாராகும் தனுஷ்.. ட்ரை லிங்குவல் படம் எப்போ ரிலீஸ்.. வெளியானது தகவல்!
நடிகர் தனுஷ் நடிப்பில் மூன்று மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் ஜனவரி 2023ல் வெளியாகும் எனும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் மூன்று மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் ஜனவரி 2023ல் வெளியாகும் எனும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
.
ட்ரை லிங்குவல் படத்தில் தனுஷ் ஒப்பந்தம்:
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி, கேப்டன் மில்லர் மற்றும் தி கிரே மேன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக தயாராக இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக இருக்கும் பெயரிடப்படாத இந்ததிரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாக உள்ளது. தற்காலிகமாக இப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என பெயரிட்டுள்ளனர். மற்ற நடிகர்கள் குறித்த விவரமோ அல்லது பட குழுவினர் குறித்த விவரமோ இதுவரையில் வெளியிடப்படவில்லை. இதில் ஹாட் நியூஸ் என்னவென்றால் இப்படம் ஜனவரி 2023 ல் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Truly excited and charged.
— Sekhar Kammula (@sekharkammula) June 18, 2021
A star who enjoys his peformance, finds purpose in his performance - Dhanush. @dhanushkraja, Let’s do it once more.@SVCLLP, Happy to continue the association with Narayan Das K. Narang Gaaru n Puskur Ram Mohan Rao Gaaru. pic.twitter.com/0WYw8bfHOu
அடுத்தடுத்து வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் :
சமீபத்தில் தான் நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த சைக்கோ திரில்லர் திரைப்படமான "நானே வருவேன்" திரைப்படம் 25 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் செய்துள்ளது. இது தவிர வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள "வாத்தி" திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஒத்திவைத்துள்ள விவாகரத்து :
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தனர்.
#Dhanush and #AishwaryaaRajinikanth decide to call off divorce after nine months, 'try to make things work'. 👌🏻❤️ pic.twitter.com/aotIjEM3ML
— KARTHIK DP (@dp_karthik) October 5, 2022
தற்போது இதை அறிவித்து ஒன்பது மாதங்களுக்கு பிறகு இருவரும் தங்களின் விவகாரத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர்கள் இருவரும் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியிடவில்லை.