மேலும் அறிய

Actor Darsheel Safary: ‘பல்லு எடுப்பா இருக்குன்னு கிண்டல் பண்ணாங்க.’ - பேட்டியில் குமுறிய அமீர்கான் பட நடிகர்!

Actor Darsheel Safary: தாரே ஜமீன் பர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்த தர்ஷீல் சஃபாரி, தனக்கு சிறு வயதில் நேர்ந்த சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

2007 ஆம் ஆண்டில், அமீர் கானின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் தாரே ஜமீன் பர். டிஸ்லக்ஸியா எனப்படும் கற்றல் குறைப்பாடுடைய இஷான் எனும் குழந்தையை சுற்றி பயணிக்கப்படும் கதை இது. ஒல்லியான தோற்றத்துடனும், எடுப்பான பற்களுடனும் இஷான் கதாப்பாத்திரத்தை அப்படியே உள்வாங்கி நடித்த சிறுவன்தான் தர்ஷீல் சஃபாரி. இப்போது அவர், 25 வயத இளைஞராக வளர்ந்து நிற்கிறார். 

யார் இந்த தர்ஷீல் சஃபாரி?

தாரே ஜமீன் பர் படத்தில், கற்றல் குறைபாடுடைய சிறுவன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக பல குழந்தைகள் ஆடிஷன் செய்யப்பட்டனர். பல நாள் தேடலுக்கு பிறகு, தாரே ஜமீன் பர் படக்குழுவின் கண்களில் சிக்கியவர்தான் தர்ஷீல் சஃபாரி. அவர்களது தேர்வு வீண் போகவில்லை என நிரூபிப்பதைப் போல, தனது அசத்தலான ஆக்டிங் திறமையால் அனைவரையும் மிரள வைத்த குழந்தை தர்ஷீல். இவரது நடிப்பை பாராட்டி, சிறு வயதிலேயே தர்ஷீலுக்கு ஃபிலிம் ஃபேர் விருது வழங்கப்பட்டது. 


Actor Darsheel Safary: ‘பல்லு எடுப்பா இருக்குன்னு கிண்டல் பண்ணாங்க.’ - பேட்டியில் குமுறிய அமீர்கான் பட நடிகர்!

சிறுவனாக திரையிலகிற்கு அறிமுகமான இவர், பாடல் பாடுவது நடனம் ஆடுவது என பன்முகத் திறமைகளை கொண்டவர். அவ்வப்போது சில சின்னத்திரை தொடர்களிலும் தோன்றும் இவருக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர். குழந்தையாக திரையில் தோன்றி அனைரையும் குஷி படுத்திய இவர், தற்போது கேப்பிட்டல் ஏ ஸ்மால் ஏ (Capital A small a) என்ற காதல் குறும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்த ஒரு நேர்காணலில் கலந்து காெண்ட தர்ஷீல்  சிறுவயதில் தான் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஒரு தெரிவித்துள்ளார். 

‘பல் எடுப்பாக உள்ளதாக கூறி..’

தர்ஷீல் தற்போது ஹீரோவாக நடித்துள்ள குறும் படத்தில் அவருக்கு ஜோடியாக அஸ்வினி பிள்ளை நடித்துள்ளார். இப்படம், அமேசான் மினி டிவியில் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த நேர்காணல் ஒன்றில், தர்ஷீல் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சிறுவயதில் தான் மிகவும் உணர்ச்சி வசப்படும் குழந்தையாக இருந்ததாகவும், அவரை சுற்றி நிகழந்த பல விஷயங்கள் அவரை பாதிப்படைய செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், படத்தில் நடிக்க வாய்ப்பு வருவதற்கு முன்னர், இவரது பல் மற்றும் உயரம் குறித்து இவரைப் பலர் கேலி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். “எல்லாம் நன்மைக்கே நடந்தது. என்னுடைய பற்கள் அப்படி இருந்ததினால்தான் எனக்கு தாரே ஜமீன் பர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது” என கூறுகிறார் தர்ஷீல். அதுமட்டுமன்றி, இவையனைத்தையும் தான் கற்றல் முறையிலேயே பார்க்கிறேன் என பெருமிதத்துடன் கூறுகிறார் தர்ஷீல் சஃபாரி. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Darsheel Safary (@dsafary)

கேப்பிட்டல் ஏ ஸ்மால் ஏ:


Actor Darsheel Safary: ‘பல்லு எடுப்பா இருக்குன்னு கிண்டல் பண்ணாங்க.’ - பேட்டியில் குமுறிய அமீர்கான் பட நடிகர்!

உயர வித்தியாசத்தினால் காதலர்கள் இருவர் இந்த சமூகத்தினால் எப்படி கேலி செய்யப்படுகின்றனர் என்பதைத் தழுவி கேப்பிட்டல் ஏ ஸ்மால் ஏ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், தன்னை குள்ளமாக காண்பிப்பதற்காக படக்குழு பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தர்ஷீல் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த படத்தில் நடித்தது மிகவும் ஜாலியாக இருந்ததாக தர்ஷீல் அந்த நேர்காணலில் கூறியுள்ளார். இந்த குறும்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வீடியோக்களை தர்ஷீலின் ரசிகர்கள் சமூக வலைதளம் முழுவதும் வைரலாக்கி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Embed widget