மேலும் அறிய

HBD Bharath: உனக்கென இருப்பேன் உயிரை கொடுப்பேன்... நெஞ்சை கனமாக்கிய 'காதல்' பரத் பிறந்தநாள் இன்று  

ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான பரிணாமத்தை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கான இடத்தை கைப்பற்றிய நடிகர் பரத் பிறந்தநாள் இன்று.

தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக திகழும் நடிகர் பரத் அறிமுகமே பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். பரத் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  

பாய்ஸ் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் 2004ம் ஆண்டு வெளியான விஜிலன்ட் திரைப்படமான '4 தி பீப்பிள்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இரண்டிலுமே மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. அடுத்ததாக விஷால், ரீமா சென் நடிப்பில் வெளியான செல்லமே படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பரத் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. 

HBD Bharath: உனக்கென இருப்பேன் உயிரை கொடுப்பேன்... நெஞ்சை கனமாக்கிய 'காதல்' பரத் பிறந்தநாள் இன்று  

இதுவரையில் துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும் ரசிகர்களை கவனம் பெற்ற பரத் முதல் முதலாக ஹீரோவாக அறிமுகமானது, 2004ம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தில். முதல் படமே ஒரு வெற்றி படமாக அமைந்து அவரின் திரைப்பயணத்திற்கு ஒரு பிள்ளையார் சுழியாக அமைந்தது. அப்பாவித்தனமான ஒரு மெக்கானிக்காக மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். அப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதுவே அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை குவித்தது. வெயில், எம். மகன், பழனி, கண்டேன் காதலை, நேபாளி, பட்டியல், கூடல் நகர் இப்படி வரிசையாக ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான பரிணாமத்தை வெளிப்படுத்தினார். முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கான இடத்தை கைப்பற்றினார். 

2014ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஜாக்பாட் படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார். திரை பயணத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் வெற்றி தோல்வியும் மாறிமாறி வந்தாலும் விடாமுயற்சியுடன் இன்றும் பல படங்களில் பேக் டு பேக் நடித்து வருகிறார். அந்த வகையில் 2019ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் முறையை அப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

HBD Bharath: உனக்கென இருப்பேன் உயிரை கொடுப்பேன்... நெஞ்சை கனமாக்கிய 'காதல்' பரத் பிறந்தநாள் இன்று  

பரத் ஒரு சிறந்த நடிகர் என்பதை காட்டிலும் ஒரு திறமையான நடன கலைஞர். சிறு வயது முதலே டான்ஸ் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  ஸ்விங்கர்ஸின் மியூசிக் அகாடமியில் நடைபெற்ற 'இன்ஸ்பிரேஷன்ஸ்' என்ற நிகழ்ச்சியை பார்த்த ஷங்கர் அவருக்கு தனது பாய்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்துள்ளார். 

நடிகர் பரத் தனது சிறு வயது தோழியான ஜெஸ்லி என்பவரை 2013ம் அண்ட் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2018ம் ஆண்டு  இரண்டை ஆண் குழந்தை பிறந்தது.  

இன்றும் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பரத்துக்கு ஒன்ஸ் மோர் பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Teacher Protest: இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி வந்தாச்சு.! இன்று வெளியாகிறது சூப்பர் அறிவிப்பு.?
இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி வந்தாச்சு.! இன்று வெளியாகிறது சூப்பர் அறிவிப்பு.?
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Bhogi 2026 Wishes: தீயவை பொசுங்கட்டும்.. நன்மை ஒளியாய் பரவட்டும்.. நண்பர்கள், குடும்பத்தினருக்கான போகி வாழ்த்துகள்
Bhogi 2026 Wishes: தீயவை பொசுங்கட்டும்.. நன்மை ஒளியாய் பரவட்டும்.. நண்பர்கள், குடும்பத்தினருக்கான போகி வாழ்த்துகள்
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Teacher Protest: இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி வந்தாச்சு.! இன்று வெளியாகிறது சூப்பர் அறிவிப்பு.?
இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி வந்தாச்சு.! இன்று வெளியாகிறது சூப்பர் அறிவிப்பு.?
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Bhogi 2026 Wishes: தீயவை பொசுங்கட்டும்.. நன்மை ஒளியாய் பரவட்டும்.. நண்பர்கள், குடும்பத்தினருக்கான போகி வாழ்த்துகள்
Bhogi 2026 Wishes: தீயவை பொசுங்கட்டும்.. நன்மை ஒளியாய் பரவட்டும்.. நண்பர்கள், குடும்பத்தினருக்கான போகி வாழ்த்துகள்
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
Pongal Festival : டோட்டலாக காலியான சென்னை.! 4 நாட்களில் இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.? வெளியான லிஸ்ட்
டோட்டலாக காலியான சென்னை.! 4 நாட்களில் இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.? வெளியான லிஸ்ட்
Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?
Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
Embed widget