Actor Bala: "என் மனைவியை பிரிச்சிட்டான்" இசையமைப்பாளர் மீது சிறுத்தை சிவா தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு
Actor Bala on Gopi sundar: இசையமைப்பாளர் கோபி சுந்தர் தான் தன்னுடைய மனைவி தன்னிடமிருந்து பிரிவதற்கான முக்கியமான காரணம் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக பரிணாம எடுத்த சிறுத்தை சிவா, அஜித் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களான விஸ்வாசம், வீரம், வேதாளம் உள்ளிட்ட படங்களையும் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்தே, கார்த்தியின் சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிகர் சூர்யா நடித்து வரும் வரலாற்று திரைப்படமான 'கங்குவா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சிறுத்தை சிவா தம்பி:
இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா அன்பு, காதல் கிசு கிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் மலையாள திரையுலகம் பக்கம் செல்ல அங்க அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமைந்தது. அதை தொடர்ந்து மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வந்தார். பின்னர் அங்கும் வாய்ப்புகள் கூறிய துவங்க சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கும் பாடகி அம்ருதாவுக்கும் 2010ம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
பாலாவின் குற்றச்சாட்டு :
சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் பாலா தனது விவாகரத்துக்கு காரணமாக இருந்தவர் குறித்து பேசியிருந்தார். பாலாவின் முன்னாள் மனைவியும் பாடகியுமான அம்ருதா, பிரபல இசையமைப்பாளரான கோபி சுந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பாலா தன்னுடைய மனைவியை பிரிவதற்கு காரணமாக இருந்தவர் கோபி சுந்தர் தான் என்ற அதிர்ச்சியான தகவலை கூறினார். அது குறித்து மேலும் பேச விருப்பமில்லை என்பதையும் தெரிவித்தார். அவர்களின் டார்ச்சரை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை வரை சென்று மீண்டதாகவும், இன்னும் அம்ருதா தன்னிடம் பணம் கேட்டு நச்சரிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
அம்ருதாவின் சகோதரியின் விளக்கம் :
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அம்ருதாவின் சகோதரி இதற்கு எங்கள் தரப்பு நயத்தை கூறினால் இந்த சர்ச்சை மேலும் பெரிதாகும் என்பதால் எங்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்க விரும்பவில்லை என தெரிவித்து இருந்தார். நடிகர் பாலாவின் இந்த சர்ச்சையான பேச்சு மலையாள திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபி சுந்தர் இசை :
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு இசையமைப்பாளராக, நடிகராக, பாடகராக இருந்து வருபவர் கோபி சுந்தர். தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ள கோபி சுந்தர் தமிழில் தோழா, தேவி, தள்ளி போகாதே, பொய் சொல்ல போறோம், நித்தம் ஒரு வானம், பெங்களூர் டேஸ், வேலன், வாசுகி, நிசப்தம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல திரைப்படங்களுக்கு இசை அமைத்ததுடன் நடிகராகவும் முகம் காட்டியுள்ளார் கோபி சுந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

