Actor Arya | தன்னுடைய செல்ல மகளின் பெயரை அறிவித்த ஆர்யா.! ரசிகர்கள் வாழ்த்து!
தன்னுடைய செல்ல பெண் குழந்தையின் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆர்யா குறிப்பிட்டார்.
அப்போதெல்லாம், ஆர்யாவின் திருமணம் பற்றி எப்போதுமே திரையுலகில் ஏதாவது வதந்தி வந்து கொண்டே இருக்கும். கலர்ஸ் தொலைக்காட்சியில் அவர் பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கூட ஆர்யாவின் திருமண சர்ச்சைகளையே கருவாக்கி உருவானது தான். அந்த நிகழ்ச்சியில் அழகுப் பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்யாவை இம்ப்ரஸ் பண்ணக் காத்திருக்க, இறுதிச் சுற்றில் முடிவைச் சொல்லாமல் கல்தா கொடுத்தார் ஆர்யா. இதனால், பல அழகிய இதயங்கள் நொறுங்கிப் போயின.
இந்த நிகழ்ச்சிக்கு இளம் பெண்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதே அளவுக்கு சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியது. எதிர்ப்புகளின் ஊடேயே அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிலை தான் கஜினிகாந்த் படத்தில் நடித்தார் ஆர்யா. அப்போது ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2019ல் கரம்பிடித்தனர். சாயிஷா ஷேகல் பாலிவுட் பிரபலம், பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் திருமணத்துக்குப் பின்னர் வந்த படம்தான் டெடி. அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் கூட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பின்னரும் இருவரும் இணைந்து நடித்தனர். இந்நிலையில் ஆர்யா, சாயிஷா தம்பதிக்கு ஜூலையில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஆர்யா- சாயிஷா தம்பதியினர் சந்தோஷத்தில் மூழ்கினர்.
தற்போது இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தன்னுடைய செல்ல பெண் குழந்தையின் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆர்யா குறிப்பிட்டார். ஆரியனா என்ற குழந்தையின் பெயரை அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து குறிப்பிட்டுள்ள அவர், தந்தையாகிய மாதங்கள். இனிய பெண் குழந்தைகள் தினம் எனக் குறிப்பிட்டு #Ariana என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். குழந்தையின் பெயர் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram