மேலும் அறிய

பிக்பாஸுக்கு போட்டியா? மாஸ் ரியாலிட்டி ஷோவில் களமிறங்குறது யார் தெரியுமா?

முதல்முறையாக நிகழ்ச்சி தொகுப்பாளராக அர்ஜுன் கலந்து கொள்ளவிருக்கும், சர்வைவர் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது

திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தற்போது சின்னதிரை பக்கம் வருகின்றனர். ஒரு சிலரோ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றனர். கமல் ஹாசன் தொடங்கி சூர்யா, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர். அந்த பட்டியலில் தற்போது புதிதாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளார். ஆம்... ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பெயர் போன அர்ஜுன் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்குகிறார்.
இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகவுள்ள, ‘சர்வைவர்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். 90 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு தீவில் நடைபெறவுள்ளது.
 
18 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அந்த தீவில் தங்க வைக்கப்படுவார்கள். கடுமையாக நடைபெறும் சாவல்களைக் கடந்து, யார் தங்களது பயணத்தைத் தீவில் வெற்றிகரமாக முடிகிறார்களோ அவர்களே , சர்வைவர் நிகழ்ச்சியில் வின்னராக தேர்வு செய்யப்படுவார். இதற்காக 90 நாட்களுக்கு அர்ஜுன், போட்டியாளர்களுடன் ஒரே தீவில் தங்க உள்ளார். 
 
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் வெல்லப்போகும் நபருக்கு 1 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும் என்றும், தொலைபேசி இல்லாமல் போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்பதும், ப்ரோமோ மூலம் தெரிகிறது. 
 

அதேபோல் அர்ஜுன் அதில், “உழைத்தால்தான் பிழைக்க முடியும். போராட்டம் இல்லாமல் எதை நாம் இங்கே சாதித்துக் காண்பிக்க முடியாது” என பேசும் வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மாதம் இறுதி அல்லது செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும் இந்த நிகழ்ச்சியில் வனிதா விஜய்குமார், விக்ராந்த், நந்தா, ரோபோ ஷங்கர் மகள் இந்திராஜா சங்கர், விஜயலட்சுமி, ஸ்ரீ ரெட்டி,  சஞ்சனா சிங், தொகுப்பாளினி பார்வதி, ஷாலு ஷம்மு, ஜான் விஜய், கோபிநாத் ரவி மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகப் பேசப்படுகிறது. இருப்பினும் இந்த பட்டியலில் இருக்கும் ஒருவர் கூட இந்த செய்தியை உறுதி செய்யாததால், ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 
மேலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியும் இதேபோல் 100 நாட்களைக் கொண்டது. சீசன் 5 அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. அப்படி இருக்கும் சூழலில் எந்த நிகழ்ச்சியைக் காண்பது என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருப்பார்கள். முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக வெளியாகும் இந்த நிகழ்ச்சி தொடங்கும் தேதி, போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget