Family Man 2 | வரலாற்றை கொச்சைப்படுத்தியது Family Man 2 : கொதித்த பிரபல இயக்குநர்!
Family Man 2 இணைய தொடரை ஒளிபரப்பக்கூடாது என்று பிரபல இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த இணைய தொடரில் சில காட்சிகள் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி, இந்த தொடருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில், இந்த தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ ட்ரைலர் வெளியான சில நாட்களில் மத்திய செய்தித்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினார்.
தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை. @SeemanOfficial @thirumaofficial @PrimeVideoIN https://t.co/dFvoi8qTwb
— Cheran (@directorcheran) June 5, 2021
ஆனால் இந்த பிரச்சனைக்கு பதிலளிக்கும் விதமாக அந்த தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே வெளியிட்ட அறிக்கையில், 'தி பேமிலி மேன் 2' வெப் தொடரின் ட்ரைலரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை மட்டுமே முதன்மையாக வைத்து தற்போது பல கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த படத்தில் பணியாற்றிய பல முன்னணி கதாபாத்திரங்கள் மற்றும் கதையின் எழுத்து மற்றும் இயக்கப்பணியில் ஈடுபட்ட பலர் தமிழர்கள் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் தமிழ் மக்களின் உணர்வுகளை குறித்து நாங்கள் நன்கு அறிந்தவர்கள், தமிழ் மக்கள் மிகுந்த அன்பும் மரியாதையும் எங்களுக்கு உள்ளது. இந்த வெப் தொடரை உருவாக்க நான் பல ஆண்டுகள் கடினமாக உழைத்துள்ளோம். ஆகவே மக்கள் தயவுகூர்ந்து தொடர் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டுகிறோம். நிச்சயம் நீங்கள் எங்கள் படைப்பை பாராட்டுவீர்கள் என்று நம்பிக்கை உள்ளது' என்று அப்போது வெளியான இன்ஸ்டாகிராம் பதிவில் கூறப்பட்டுள்ளது.
Kiruthiga Udhayanidhi | க்ருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் : அப்டேட்ஸ் என்னென்ன?
விளம்பரம், இது fiction.. படைப்ப படைப்பா பாக்கனும்.. இப்படி உளறிக்கொட்டும் அனைவருக்கும்..
— Cheran (@directorcheran) June 5, 2021
ஏன் எங்கள் எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்கிறோம் என்ற காரணத்தை கீழ்க்கண்ட காணொளியில் கேளுங்கள்.. நன்றி @pesutamizhapesu #BanFamilyMan2#UnsubscribeAmazon_Tamilshttps://t.co/5nTtwTu7sb https://t.co/CSBi0B0rrH
இந்த சூழ்நிலையில் பல எதிர்ப்புகளை தாண்டி இந்த தொடர் கடந்த ஜூன் 3-ஆம் தேதி அமேசானில் வெளியானது. இந்நிலையில் பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 'தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
அதேபோல இந்த தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகை சமந்தா தனது கதாபாத்திரம் குறித்தும் ஈழத்தில் தமிழ் மக்கள் அனுபவித்த துயரம் குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த கதாபாத்திரம் மூலம் தனக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.