Watch video : சொட்ட சொட்ட ரத்தம், அடிதடி... மோதலில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன் - பிரபாஸ் ரசிகர்கள்...
Watch video : அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸ் ரசிகர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகர் பிரபாஸ் ரசிகர்கள் இடத்துக்கே கடும் மோதல் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகர் பிரபாஸ். இருவருக்குமே தனித்தனியாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பான் இந்தியன் ஸ்டார்களாக வலம் வரும் அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸ் இருவருமே சர்வதேச அளவில் பிரபலமான செலிபிரிட்டிகளாக இருந்து வருகிறார்கள். இந்த இரு ஸ்டார் நடிகர்களின் ரசிகர்கள் ரத்தம் வரும் அளவுக்கு சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர்களுக்கு இடையே நட்புறவு இருந்தாலும் அவர்களின் ரசிகர்களுக்கு இடையே மோதல் அடிக்கடி நிகழ்வதை பார்க்க முடிகிறது. இருப்பினும் இதுபோன்ற வன்முறை நிகழ்வுகள் நேரடியாக நடைபெறுவது குறைந்து வந்தாலும் சமூக வலைத்தளங்களில் தரக்குறைவான விமர்சனங்கள் மூலம் மாறி மாறி தாக்கி கொள்வதை பார்க்க முடிகிறது. தமிழ் சினிமாவில் அஜித், விஜய், கமல், ரஜினி ரசிகர்கள் சண்டை போட்டு கொள்வார்கள் ஆனால் அடிதடிகளில் ஈடுபடுவது எல்லாம் மிக மிக குறைவு தான்.
தமிழ் ரசிகர்கள் இப்படி என்றால் தெலுங்கு ரசிகர்கள் வாய்தகராறில் துவங்கி அது முற்றிப்போய் மிகவும் முரட்டு தனமாக அடிதடி வரை சென்று விட்டனர். அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸ் ரசிகர்கள் பெங்களூரில் கிரிக்கெட் போட்டியின் போது பயங்கரமாக மோதிக்கொண்டனர். நடிகர் பிரபாஸ் ரசிகர்கள் மீது அடிதடி தாக்குதல் நடத்தியுள்ளனர் அல்லு அர்ஜுன் ரசிகர்கள். ரத்தம் சொட்ட சொட்ட இரு தரப்பு ரசிகர்களும் பொதுவெளியில் படு பயங்கரமாக சண்டையிட்டு கொள்ளும் வீடியோ சோசியல் மீடியாவில் கசிந்து மிகவும் வைரலாகி வருகிறது. இதை பார்த்த அல்லு அர்ஜுன் மற்றும் பிரபாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த பயங்கரமான அடிதடி கைகளப்பில் நடிகர் பிரபாஸ் ரசிகர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சியான சம்பவத்தின் பின்னணி குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரசிகர்கள் இடையே நிகழும் இது போன்ற மோதல்கள் நடிகர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமின்றி பொது பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
Physical fight between fans of two prominent south stars . So sad to see this !pic.twitter.com/Wer2GUqdqw
— Prashanth Rangaswamy (@itisprashanth) March 11, 2024
வன்முறை இன்றி ரசிகர்கள் தங்களின் விருப்பமான நடிகர்களுக்கு அவர்களின் ஆதரவை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் தெரிவிக்கலாம்.





















