Ajith bike Trip: துணிவு ஷூட்டிங் ஓவர்.. அடுத்தது பைக் ட்ரிப்தான்.. வைரலாகும் அஜித் வீடியோ!
முன்னதாக நடிகர் அஜித் 6 முதல் ஒன்பது 9 மாதங்கள் பிரேக் எடுத்துக்கொண்டு பைக் டூர் செல்ல உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது நடிகர் அஜித் விமான நிலையத்தில் தென்பட்டுள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. துணிவு திரைப்படத்திற்காக தாடியுடன் வலம் வந்த நடிகர் அஜித், சமீபத்தில் கிளீன் சேவ் செய்து இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அஜித்தின் அடுத்த திரைப்படமான Ak62 விற்கு அவர் தயாராகுவதால், அவரது தோற்றத்தை மாற்றி உள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். AK 62 திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.
My dr chief #Ajith sir 🖤💥 pic.twitter.com/tGvt5DFLyV
— soundar saha ᵛᵃˡᶤᵐᵃᶤ Stay Home Stay Safe (@SahaSoundar) December 1, 2022
முன்னதாக நடிகர் அஜித் 6 முதல் ஒன்பது 9 மாதங்கள் பிரேக் எடுத்துக்கொண்டு பைக் டூர் செல்ல உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது நடிகர் அஜித் விமான நிலையத்தில் தென்பட்டுள்ளார். வெளியாகி உள்ள தகவல்களின் அடிப்படையில், நடிகர் அஜித் தனது பைக் டூரை தொடங்குவதற்காக ஹைதராபாத் சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்த பயணம் முடிந்த பிறகு AK 62 திரைப்படத்திற்கான வேலைகளை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.
ஏகே 62 காமெடியுடன் கலந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாக உள்ளதாகவும், லைகா ப்ரொடக்ஷன்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பவர் யார் என்று எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
துணிவு:
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை தொடர்ந்து அடுத்தடுத்து பல அப்டேட்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவந்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்து வருகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, படத்தின் கதாநாயகியும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகையுமான மஞ்சு வாரியர் ஜிப்ரான் இசையமைப்பில் துணிவு படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியானது.
View this post on Instagram
இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பஞ்சாபில் 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.