Ajith Kumar: அஜித்தே தேடிச்சென்று படம் இயக்குமாறு கேட்ட இயக்குனர்! யாரு தெரியுமா?
உச்சநட்சத்திரமாக உலா வரும் நடிகர் அஜித்தே தேடிச்சென்று தனக்கு படம் இயக்கித் தருமாறு பிரபல இயக்குனரிடம் கேட்டுக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரே இயக்குனர் ஒருவரை நள்ளிரவில் தேடிச் சென்று படம் இயக்கமாறு வேண்டுகோள் விடுத்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த இயக்குனர் யார்? அந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பதை கீழே காணலாம்.
அஜித்தே தேடிச் சென்ற இயக்குனர்:
அஜித்குமாரே தேடிச்சென்று படத்தை இயக்குமாறு கேட்டுக்கொண்ட இயக்குர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக உலா வரும் சுந்தர் சி ஆவார். இதுதொடர்பாக சுந்தர் சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ஒரு நாள் நைட் ஏவிஎம்-ல ஷீட்டிங். பாட்டு ரெக்கார்டிங்ல இருக்கேன். நைட் 11, 12 மணி இருக்கும். திடீர்னு என் உதவி இயக்குனர் வந்து சொன்னாரு அவரு உங்களை பாக்க வந்திருக்காருனு. அவர் யாருனு முன்ன பின்ன கூட பார்த்தத இல்ல.
வெளியே போயி பாத்து மிஸ்டர் அஜித் நின்னுகிட்டு இருந்தாரு. நைட் 12.30, 1 மணி ஒரு ஷார்ட்ஸ், டீ சர்ட் போட்டுகிட்டு நின்னுட்டு இருந்தாரு. அப்போதான் முதல்முறையாக இரண்டு பேரும் சந்திச்சோம். பாத்த உடனே என்ன சார்? அப்படினு கேட்டேன்.
எல்.எம்.க்கு ஒரு படம் பண்ணனும் சொல்லி நீங்கதான் டைரக்ட் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். ஆனா, நீங்க பிசியா இருக்கீங்க. பண்ணமாட்டீங்கனு சொன்னாங்க. நீங்க பண்ணீங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்படினு ஆரம்பிச்ச படம் உன்னைத் தேடி.
இவ்வாறு சுந்தர் சி பேசினார்.
உன்னைத் தேடி:
1999ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி ரிலீசான படம் உன்னைத் தேடி. அஜித்குமாருக்கு ஜோடியாக இந்த படத்தில் மாளவிகா நடித்திருப்பார். சிவகுமார், மெளலி, ஸ்ரீவித்யா, விவேக், கரண், மனோரமா, சுவாதி, ஜெய் கணேஷ், ராஜீவ், விணு சக்கரவர்த்தி, காகா ராதாகிருஷ்ணன், மதன்பாப், வையாபுரி ஆகிய நட்சத்திர பட்டாளங்களே இந்த படத்தில் நடித்திருந்தனர்.
காதல் திருமணம் செய்து வீட்டைவிட்டுச் சென்ற தங்கை - அவர் மீது கோபத்தில் இருக்கும் அண்ணன்கள் இந்த குடும்பத்தை எப்படி நாயகன் இணைக்கிறார்? என்பதே படத்தின் கதை. இந்த படத்தில் அஜித் முதன்மை ஹீரோவாகவும். கரண் இரண்டாவது ஹீரோவாகவும் நடித்திருந்தனர்.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். சாய் சுரேஷ் எடிட்டிங் செய்ய, செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.





















