மேலும் அறிய

Ajith Statement: என்னை தல என்று அழைக்க வேண்டாம் - ரசிகர்களுக்கு அஜித்குமார் அன்பு கோரிக்கை!

Actor Ajith Statement: தல என்று அழைக்க வேண்டாமென அஜித்குமார் அறிக்கை விடுத்துள்ளார்

இது குறித்து அஜித் விடுத்துள்ள அறிக்கையில்,

பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி,மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தையும் அஜித்குமார் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாக்லெட் பாயாக அறியப்பட்ட அஜித்குமார், தீனா திரைப்படம் மூலம் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார். அந்தப்படத்திலேயே தல என்ற வார்த்தை முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கும் அஜித், சினிமாவில் நடிப்போது சரி. இசை வெளியீடு, தொகைக்காட்சி நிகழ்ச்சிகள், பட விளம்பரங்கள் எதற்கும் தலையை காட்டமாட்டார். ஆனால் அவருக்கான வரவேற்பு துளியளவும் குறையாத நிலையில் அது குறைகூற முடியாத வழக்கமாகவும் உள்ளது. சினிமா என்பதைக் கடந்து அஜித், தனக்கு பிடித்தமான வேலைகளில் ஆர்வமாக ஈடுபடுபவர். சினிமாவில் நடிப்பதை தன் தொழிலாக கருதும் அஜித், ஓய்வு நேரங்களில் குடும்பத்துடனும், தனக்கு பிடித்ததையும் செய்து வருகிறார். புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்ட அஜித், தன்னுடன் நடித்த சக கலைஞர்களை விதவிதமாக புகைப்படம் எடுத்து அவர்களை மகிழ்வித்தார். 

ஏரோனாடிக்ஸில் ஆர்வம் கொண்ட அஜித், அந்தப் பாடம் தொடர்பான மாணவர்களுடன் சேர்ந்து ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அத்துடன் மாணவர்களுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார். இவரின் முயற்சியில் உருவான ட்ரோன்கள் கொரோனா காலத்தில் கிருமி நாசினி தெளிப்பதற்கு மிகவும் உதவிக்கரமாக இருந்தது. இப்படி பல வேலைகளில் ஆர்வம் இருக்கும் அஜித், தற்போது பைக்கில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த  ‘வலிமை’ படத்தின் சூட்டிங்  முடிவடைந்த நிலையில், அஜித்  பிடித்தமான பைக்கில் நாட்டின் பல இடங்களுக்கு சென்று திரும்பினார்.

அஜித்குமார் நடித்து உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தன்னை தல என்று அழைக்க வேண்டாமென அஜித்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget