AK 64 : ரேஸிங் சீசன் முடிந்தது...அடுத்த படத்திற்கு தயாரான அஜித் குமார்..அப்டேட் எப்போ தெரியுமா ?
AK 64 : ஐரோப்பாவில் கார் ரேஸிங் சீசன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நடிகர் அஜித் குமார் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்புகளை விரைவில் தொடங்க இருக்கிறார்

இந்த ஆண்டு ஜனவரி முதல் நடிகர் அஜித் பல்வேறு கார் ரேஸிங் போட்டிகளில் தனது குழுவுடன் பங்கேற்று வந்தார். இறுதியாக ஸ்பேயினில் நடந்த ஐரோப்பிய ஜிடி4 பந்தையத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி போட்டியிட்டது. கார் ரேஸிங் சீசன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தனது அடுத்த படத்திற்கான பணிகளை துவங்க இருக்கிறார் அஜித் குமார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார்கள்.
AK 64
அஜித் நடிப்பில் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 64 ஆவது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து அஜித் கார் ரேஸிங்கில் முழு கவனம் செலுத்தி வந்தார். துபாயில் நடந்த 24H மிஷ்லின் , ஐரோப்பிய நாடுகளில் நடந்த GT4 ஆகிய போட்டிகளில் அஜித் மற்றும் அவரது அணி கலந்துகொண்டு குறிப்பிடத் தகுந்த அங்கீகாரத்தை பெற்றது. ரேஸிங் டிராக்கிலும் அஜித் ரசிகர்கள் அவருக்கு பெரியளவில் ஆதரவு கொடுத்தனர். இறுதியாக அக்டோபர் 10 முதல் 12 வரை ஸ்பெயினில் நடந்த போட்டியோ இந்த போட்டித் தொடர் நிறைவுக்கு வந்தது. ரேஸி டிராக்கில் இருந்து திரும்பியுள்ள அஜித் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.
தூத்துக்குடியில் நடக்கும் கேங்ஸ்டர் கதை
இன்னொரு பக்கம் இத்தனை மாதங்கள் AK64 படத்திற்கான திரைக்கதையை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி வந்தார். குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்ககளால் கொண்டாடப்பட்டாலும் மற்ற தரப்பு ரசிகர்களை படம் அவ்வளவாக கவரவில்லை. படம் முழுதும் அஜித்தின் முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டது பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. தற்போது ஆதிக் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகும் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருபதிபடுத்தும் என படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் துறைமுகத்தை கதைக்களமாக கொண்ட இந்த படம் ஒரு கமர்சியல் என்டர்டெயினராக இருக்கும் என கூறப்படுகிறது.
AK 64 அப்டேட் எப்போ ?
ஏகே 64 படத்திற்கான அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் தற்போது விஜய் நடித்து வரும் ஜனநாயகன் , ரஜினி நடித்து வரும் ஜெயிலர் 2 மற்றும் அஜித்தின் ஏகே 64 படத்தின் அட்பேட்கள் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















