ரசிகர்களால் ஏற்பட்ட காயம்... விருதுவாங்கி ஒரு நாள்கூட ஆகல...அஜித் மருத்துவமனை சென்றதற்கு இதுதான் காரணம்
அதிகப்படியான கூட்டம் சேர்ந்ததால் அஜித்தின் காலில் அடிபட்டுள்ளதாகவும் இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

பத்மபூஷன் அஜித் குமார்
நடிகர் அஜித் குமார் நேற்று ஏப்ரல் 29 ஆம் தேதி குடியரசுத் தலைவர் கையால் பத்மபூஷன் விருதைப் பெற்றுக் கொண்டார். 30 ஆண்டுகளாக மேலாக நடித்து வரும் அஜித் திரைத்துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தையும் ரசிகர்களையும் சம்பாதித்திருக்கிறார். அவரது திரைப்பணியை கெளரவிக்கும் விதமாக இந்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதை வழங்கியுள்ளது. சினிமா தவிர்த்து அஜித் குமார் சொந்தமாக ரேஸிங் அணி ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த அணியின் தலைவராக இருந்து சர்வதேச கார் பந்தையத்தில் அஜித் தற்போது கலந்துகொண்டு வருகிறார்
குட் பேட் அக்லி
கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் கரியரில் மிகப்பெரிய வசூல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பல வருடங்களாக அஜித் ரசிகரகளின் காத்திருப்புக்கு பலனாக இந்த படம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இப்படம் ரூ 174 கோடி வசூலித்துள்ளதாகவும் உலகளவில் ரூ 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
அஜித் பிறந்தநாள்
அஜித் குமார் நாளை மே 1 ஆம் தேதி அஜித் தனது 54 ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இப்படியான நிலையில் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டது ரசிகர்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வழக்கமான உடல் பரிசோதனைக்கு அஜித் சென்றுள்ளதாக முதலில் தகவல் வெளியான நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
காலில் ஏற்பட்ட காயம்
பத்மபூஷன் விருதை பெற்ற கையோடு அஜித் மற்றும் அவரது குடுமபத்தினர் சென்னை திரும்பினார்கள். அப்போது விமான நிலையத்தில் அவரைச் சுற்றி ரசிகர்கள் சூழந்துள்ளார்கள். கூட்ட நெரிசலில் சிக்கிய அஜித் குமார் காலில் சிறிய தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பிசியோதெரபி பரிசோதனைக்காக அஜித் மருத்துவமனை சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சில மணி நேர சிகிச்சைக்குப் பின் அஜித் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.





















