நீதா அம்பானி ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்!

Published by: ஜான்சி ராணி

பெரும் தொழிலதிபர் நீதா அம்பானி 60 வயதை கடந்தும் ஃபிட்டாக இருப்பது பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.

நீதா அம்பானி உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக பரதநாட்டியம் மற்றும் யோகா ஆசனம் செய்கிறார். இதோடு நீச்சல் பயிற்சியும் செய்கிறார்.

நீதா அம்பானி வாரத்தில் 5 நாட்கள் தவறாமல் உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி செய்கிறாராம். ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவாராம்.

உடல் ஆரோக்கியத்துன் இருக்க எந்த வயதானாலும் உடற்பயிற்சி அவசியம் என்கிறார் நீதா அம்பானி. அதோடு, மன அழுத்தம் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கவும் பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார்.

நீதா அம்பானி சைவ உணவுகளை சாப்பிடுகிறாராம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவரது பழக்கமாக இருக்கிறது.

வெள்ளை சர்க்கரை, துரித உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டாராம்.

புரோட்டீன், நார்ச்சத்து என உடலுக்கு அவசியமான உணவுகளை சாப்பிட கூடியவர்.

மன ஆரோக்கியத்திற்கு யோகா செய்வதை பழக்கமாக வைத்திருக்கிறாராம்.

எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உடற்பயிற்சி செய்யவதை தவிர்க்க மாட்டாராம்.