அஜித் 102 டிகிரி காய்ச்சலோடு ஆடினார்...கல்யாண் மாஸ்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்
விடாமுயற்சி படத்தின் சவாதீகா பாடலின்போது நடிகர் அஜித் குமாருக்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்ததாக டான்ஸ் மாஸ்டர் கல்யாண் தெரிவித்துள்ளார்
விடாமுயற்சி
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி . லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக இதுவரை எந்த வித அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. மேலும் சமூக வலைதளங்களில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்களும் பரவி வருகின்றன.
விடாமுயற்சி படத்தின் டிசர் வெளியாகி கவனம்பெற்ற நிலையில் படத்தின் டிரைலர் ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 12.07 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
102 டிகிரி காய்ச்சலுடன் நடித்த அஜித்
விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் 'சவாதீகா' சமீபத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அனிருத் இசையில் அறிவு எழுதியுள்ள இந்த பாடலை அந்தோனி தாசன் பாடியுள்ளார். பாடலில் அஜித் குமார் போடும் ஸ்டெப்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் இந்த பாடலுக்கு படர் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.
#VidaaMuyarchi - Choreographer Kalyan Master in a Recent Interview ⭐:
— Laxmi Kanth (@iammoviebuff007) December 31, 2024
" #Ajith sir was on 102 degree fever & he kept coughing while filming for #sawadeeka .. We asked him to rest but he said, "40 Dancers are there.. These many Technicians should not get affected.. Give me Half… pic.twitter.com/VtxhXVpJNZ
இப்பாடலுக்கு நடனம் கற்பித்த கல்யாண் மாஸ்டர் சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் " சவாதீகா பாடலின் போது அஜித் சாருக்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்தது. படப்பிடிப்பில் இருமிக் கொண்டே இருந்தார். நாங்கள் அவரை ஓய்வெடுக்க சொன்னோம். 40 டான்ஸர்கள் மற்றும் தொழில் நுட்பகலைஞர்கள் பாதிக்கப்படக் கூடாது. எனக்கு அரை மணி நேரம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு ஆண்டி பையோடிக் மாத்திரைகள் சாப்பிட்டு அஜித் வந்தார். 102 டிகிரி காய்ச்சலோடு அஜித் சவாதீகா பாடலை முடித்துக் கொடுத்தார்" என கல்யாண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.