மேலும் அறிய

முடிஞ்சா முகத்துக்கு நேரா பேசுங்க... மகளைக் கிண்டல் செய்தவர்களை துவைத்து எடுத்த அபிஷேக் பச்சன்..

சமீபத்தில் அபிஷேக் பச்சன் - ஐஷ்வர்யா ராய் பச்சன் தம்பதியின் மகள் ஆரத்யா பச்சன் தொடர்ந்து பலரால் கிண்டல் செய்யப்பட்டும், சீண்டப்பட்டும் வருகிறார். இதனை அபிஷேக் பச்சன் கண்டித்துள்ளார்.

தன்னைச் சர்ச்சைகளில் இருந்து எப்போதும் விலக்கியே வைத்திருக்கும் வெகுசில பாலிவுட் பிரபலங்களுள் அபிஷேச்க் பச்சன் முக்கியமானவர். அவர் கடுமையான சூழல்களின் போதும் தனது மென்மையான அணுகுமுறைக்காக அறியப்பட்டவர். ஏனெனில் அவர் இதுவரை பொதுவெளியில் தன் மீதான கட்டுப்பாட்டை இழந்ததில்லை. சமூக வலைத்தளங்களில் அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்களிடமும் அவர் இதுவரை மரியாதையான பதில்களைவே கொடுத்து வந்திருக்கிறார். எனினும் தன் மகளுக்கு ஒரு பிரச்னை வரும் போது, அவர் தனது அணுகுமுறையை மாற்றம் செய்துள்ளார். 

சமீபத்தில் அபிஷேக் பச்சன் - ஐஷ்வர்யா ராய் பச்சன் தம்பதியின் மகள் ஆரத்யா பச்சன் தொடர்ந்து பலரால் கிண்டல் செய்யப்பட்டும், சீண்டப்பட்டும் வருகிறார். இணையத்தில் ஆரத்யா தனது நடைக்காக, பொது இடத்தில் தன் தாயால் மறைக்கப்படுவதற்காகவும், இன்னும் தனது பிறந்தநாளின்போது மேக்கப் போட்டுக் கொண்டதற்காகவும் கடுமையாக கேலிக்கு உள்ளாகி வருகிறார். 

முடிஞ்சா முகத்துக்கு நேரா பேசுங்க... மகளைக் கிண்டல் செய்தவர்களை துவைத்து எடுத்த அபிஷேக் பச்சன்..
தன் குடும்பத்தினருடன் அபிஷேக் பச்சன்

 

தன் புதிய திரைப்படமான `பாப் பிஸ்வாஸ்’ ப்ரொமோஷன்களின் போது, தன்னையும், தன் 10 வயது மகளையும் இணையத்தில் கடுமையாகக் கேலி செய்வது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அபிஷேக் பச்சன், `இது ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதனை என்னால் சாதாரணமாகக் கடந்து போக முடியாது. நான் பொதுவெளியில் இயங்குகிறேன். அதனால் என்னைத் தாக்குவதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் என் மகள் இதில் சேர மாட்டாள். உங்களுக்கு சொல்வதற்கு ஏதேனும் இருந்தால், என் முகத்திற்கு நேராக நின்று சொல்லுங்கள்’ என்று கடுமையாகப் பேசியுள்ளார். 

மேலும் இதே நேர்காணலின் போது, தன்னுடைய நடிப்பில் பார்வையாளர்கள் குறை கண்டுபிடிப்பது தவறில்லை எனவும், அதனை சரிசெய்து கொள்வது தன்னுடைய பணி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இணையத்தில் தான் பாலிவுட் பிரபலங்களுக்குக் குழந்தையாகப் பிறக்காமல் இருந்திருந்தால் நடிகராக ஆகியிருக்க முடியாது என்று கிண்டல் செய்வதில் உண்மை இருப்பதாக விளையாட்டாக அபிஷேக் பச்சன் ஒப்புக் கொண்டுள்ளார். 

முடிஞ்சா முகத்துக்கு நேரா பேசுங்க... மகளைக் கிண்டல் செய்தவர்களை துவைத்து எடுத்த அபிஷேக் பச்சன்..
தன் குடும்பத்தினருடன் அபிஷேக் பச்சன்

 

அபிஷேக் பச்சன் நடிகை ஐஷ்வய்ரா ராய் பச்சனைத் திருமணம் செய்து கொண்டவர். மாலத் தீவுகளில் குடும்பத்தோடு விடுமுறையைக் கழிக்கச் சென்ற போது, மகள் ஆரத்யாவின் பத்தாவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளனர். மீண்டும் மும்பைக்குத் திரும்பிய போது, விமான நிலையத்தில் அபிஷேக் பச்சனின் குடும்பத்தைப் பத்திரிகையாளர்கள் படம்பிடித்தனர். இதில் அவரது மகள் ஆரத்யாவின் நடையை இணையவாசிகள் பலர் கிண்டல் செய்யத் தொடங்கினர். மேலும் பலரும் ஐஷ்வர்யா ராய் பச்சன் தன் மகளைப் பொது இடங்களில் மூடி மறைப்பதையும் விமர்சித்துள்ளனர். 

அபிஷேக் பச்சன் நடித்துள்ள `பாப் பிஸ்வாஸ்’ திரைப்படம் வரும் டிசம்பர் 3 அன்று Zee5 தளத்தில் வெளியாகவுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேட்பனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேட்பனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேட்பனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேட்பனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget