மேலும் அறிய

Ravi Mohan: ரவிமோகன் மேல மரியாதை இருக்கு.. ஆதாரம் எங்ககிட்டேயும் இருக்கும்.. மாமியார் சுஜாதா பதிலடி

ரவி மோகனுக்கு என்ன அழுத்தம் என தெரியவில்லை. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். ஆனால் நான் அழமாட்டேன், உணர்ச்சிவசப்பட மாட்டேன். காரணம் நாங்கள் எந்த தப்பும் பண்ணல என சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து விவகாரம் தொடர்பாக நடிகர் ரவி மோகன் கண்ணீர் மல்க குற்றம் சாட்டிய நிலையில் அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் பதிலளித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் ரவி மோகன், பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரவி மோகன் மனைவியை பிரிவதாக அறிவித்தார். அதேசமயம் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

இதனிடையே பாடகி கெனிஷாவுடன் ஏற்பட்ட உறவு காரணமாக தான் ரவி மோகன் விவாகரத்து முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது. ரவி மோகன் - கெனிஷா ஜோடியாக சுற்றி வந்த நிலையில் நேற்றைய தினம் காதலில் இருந்து வெளியேறுவதாக கெனிஷா பதிவிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  இன்று காலை ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்து மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பம் மீது பல குற்றச்சாட்டுகளை கண்ணீர் மல்க தெரிவித்தார். அதேசமயம் பிரபல நடிகை ஒருவர் தான் இந்த பிரச்னைக்கு காரணம் எனவும் கூறினார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. பலரும் சமூக வலைத்தளத்தளங்களில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இன்றைக்கு காலையில் நடந்த விஷயம் மிகவும் துயரமானது. ஏனென்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட அத்தனை அவதூறுகளும் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனை இன்னைக்கு மேடை போட்டு பேசியிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நாங்கள் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால் ரவி மோகனுக்கு என்ன அழுத்தம் என தெரியவில்லை. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். நான் அழமாட்டேன், உணர்ச்சிவசப்பட மாட்டேன். காரணம் நாங்கள் எந்த தப்பும் பண்ணல. 

அத்தனை விளக்கங்களுக்கும் நாங்கள் பதில் கொடுப்போம். ஆதாரத்துடன் விரைவில் வந்து சந்திக்கிறேன். 16 வயதுடைய மூத்த மகனான என்னுடைய பேரன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருகிறார். அவனுக்கு எவ்வளவு பெரிய மன உளைச்சலில் இருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். இதுக்குமேலேயும் பிள்ளைகளுக்கு மன உளைச்சல் கொடுக்காதீர்கள். என்மேல் வைக்கப்பட்ட அவதூறுகளுக்கும் பதில் கொடுப்பேன். 

பிள்ளைகளை பார்க்கவே விடுவதில்லை என சொல்வதில் உண்மையில்லை. 2008ல் ஒரு நேர்காணலில் யார் கையை அறுத்துக்கொண்டார் என்பது சொல்லப்பட்டிருக்கிறது. என்னுடைய மகள்களுக்கு நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். 2 வருடம் முன்னாடி எந்த விஷயமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். இப்போது என்ன முடிவு எடுத்திருக்கிறார் என தெரியவில்லை. ரவிமோகன் மீது இப்போதும் மரியாதை இருக்கிறது. அவரைப் பற்றி நாங்கள் தவறாக பேச மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget