Samantha Watch video : சொன்னதைக் கேட்காத பச்சை உடை! விருது விழாவை கவர்ச்சியால் அசரடித்த சமந்தா.! வைரல் வீடியோ!
க்ரிட்டிக் சாய்ஸ் பிலிம் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தாவின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா சமீப காலமாகவே அதிகம் கவனம் பெறும் நடிகைகள் பட்டியலில் இணைந்துவிட்டார்.அவர் என்ன செய்தாலும் ஒன்று பேசு பொருளாகிவிடுகிறது இல்லையென்றால் வைரலாகிவிடுகிறது. சமந்தா தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிப்பதை விட பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும், தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என பல துறைகளிலும் களம் கண்டு வருகிறார் சமந்தா. இப்படியான சூழலில் சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பாரா என்ன ?
View this post on Instagram
தற்போது சமந்தா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாரா முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் தற்போது சமந்தா வலம் வர இருக்கிறார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா 1.5 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. அதபோல், அடுத்த படத்தில் இருந்து 3 கோடி என நிர்ணயித்துவிட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், க்ரிட்டிக் சாய்ஸ் பிலிம் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தாவின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. பச்சை மற்றும் கருப்பு நிறம் கலந்த க்வுன் உடையில் பளீச் என்று பட்டையை கிளப்பியுள்ளார்.
🛐❤️ Good morning🌞 #SamanthaRuthPrabhu pic.twitter.com/MhjegTh5ZH
— ɪɴᴅɪʀᴀᴊɪᴛʜ ʙᴏsᴇ 🕊 (@darkmanofl) March 11, 2022
சமந்தா வேறு ஒரு நடிகையின் படத்தில் கிளாமர் பாடல்களுக்கு ஆட பல டாப் ஹீரோயின்கள் யோசிக்கும் சூழலில் , சமந்தா ஆடிய ஒ அண்டவா குத்துப்பாடல் யூடியூப் வரலாற்றிலேயே சாதனை படத்தை பாடலாக வலம் வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்