மேலும் அறிய

'' நம்மை போல நெஞ்சம் கொண்ட..'' - இளையராஜா குறித்த செய்தியை ட்வீட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

"ஒரு பாடலை ஒருவர் எப்போது கேட்டாலும் அது சற்று முன் பூத்த மலர் போல  இருக்க வேண்டும்."

இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்திருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சினிமாவில் முக்கிய இசை அடையாளமாக பார்க்கப்படுபவர்கள் இசையானி இளையராஜாவும், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானும். ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவின் சிஷ்யனாக இருந்தவர். அஞ்சலி படத்திற்கு பிறகு மணிரத்தினம் மற்றும் இளையராஜா இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அவரின் சிஷ்யனான ஏ.ஆர்.ரஹ்மானுடன் பயணிக்க தொடங்கினார். இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் மீது  சற்றே இளையராஜா வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் இசையின் வெவ்வேறு துருவங்கள், இளையராஜா வெகுஜன மக்களுக்கானவர், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியா தாண்டி , உலகம் முழுவதும் ஒலிக்க கூடியவர். 

' நம்மை போல நெஞ்சம் கொண்ட..'' - இளையராஜா குறித்த செய்தியை ட்வீட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

சமீபத்தில் தனது ஸ்டுடியோவில் பத்திரிகையாளர்கள் சிலரை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்தார் அப்போது  இசை குறித்தும், இசையமைப்பாளர்கள் குறித்தும் இளையராஜா மனம் விட்டு பேசியிருந்தார். அதில், "ஒரு பாடலை ஒருவர் எப்போது கேட்டாலும் அது சற்று முன் பூத்த மலர் போல  இருக்க வேண்டும்.  பூத்த மலர் என்ன ஆகும் என்றால் ஓரிரு நாளில் சருகாகி உதிர்ந்து போய்விடும். ஆனால் பாடல் மலராகவே இருக்கும்.புதிதாக மெட்டமைக்கப்பட்டது போல இருக்க வேண்டும். அப்படியான பாடல்களை நோக்கித்தான் நமது மனம் எப்போதும் செல்லும். பழைய பாடல்கள் இப்போதும் புதிதாக மெட்டமைக்கப்பட்ட பாடல் போல இருப்பதால்தான் மனம் அவற்றை கேட்க வேண்டும் என ஆசைப்படுகிறது “ என தெரிவித்திருந்தார். மேலும் இசைக்கலைஞர்களின் வீட்டை கூட வெளிநாடுகளில் பராமரிக்கிறார்கள்.இங்கு இசைக்கலைஞர்களின் இசைக்கருவிகளை கூட நாம் பாதுகாப்பதில்லை என குறிப்பிட்ட இளையராஜா தனக்கு திரைக்கு முன்னால் தோன்ற விரும்பவில்லை, என் முகத்தை பார்த்து நீங்கள் என்னை நினைவு படுத்திக்கொள்ள கூடாது. இசை மூலம் உங்கள் நினைவில் நான் இருக்க வேண்டும் . என பெருமிதமாக தெரிவித்தார்.  செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட இந்த செய்தியை இசையைப்பாளர் ஏ.ஆ.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இதனை ரி ட்வீட் செய்த நடிகர் தனுஷ் “இந்த ட்வீட்டும் இந்த ட்வீட்டில் இருப்பதும், அவ்வளவுதான் “ என குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 முன்னதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்ற வீடியோ வைரலானது. சென்னை நந்தனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் சற்றே தவறாக வாசித்துவிட, உடனே இளையராஜா ”ஏன் இப்படி வாசிக்கிற? உனக்கு தான் இந்த ட்யூன் தெரியுமே என்று செல்லமாக அட்வைஸ் வழங்க, சிரித்து நகர்ந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். 

' நம்மை போல நெஞ்சம் கொண்ட..'' - இளையராஜா குறித்த செய்தியை ட்வீட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!

Embed widget