Tamannaah Bhatia: 7ஆம் வகுப்பு பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்பு... கொந்தளிக்கும் பெற்றோர்!
Tamannaah Bhatia: பெங்களூரு பள்ளி ஒன்றில் மாணவர்களின் பாடத்திட்டத்தில் தமன்னா பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது பெரும் எதிர்ப்பைப் பெற்றுள்ளது.
Tamannaah Bhatia: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா பாட்டியா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். திரைத்துறையில் மிகவும் பிஸியாக வலம் வரும் தமன்னா குறித்த குறிப்புக்கள் சில பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது கடும் விமர்சங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் தனியார் பள்ளிகளில் அவர்களின் பாடத்திட்டங்களை அவர்களே வடிவமைத்துக் கொள்ளலாம் என்ற சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஹெப்பால் பகுதியில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியின் 7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் 'சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை' என்ற தலைப்பில் உள்ள ஒரு பாடத்தில் நடிகை தமன்னா குறித்த தகவல் சில இடம்பெற்றுள்ளன.
சிந்தி மக்களின் வாழ்க்கை பற்றின பாடப்புத்தகத்தில் தமன்னா பற்றி கீழ்க்கண்ட குறிப்பு இடம் பெற்று இருந்தது.
"தமன்னா என்று அழைக்கப்படும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கியமான நடிகை ஆவார். பல ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். பல முன்னணி பிராண்ட்கள் மற்றும் தயாரிப்புகளின் அம்பாஸடராக இருந்து வருகிறார்.
2005ம் ஆண்டு தன்னுடைய 15வது வயதில் பாலிவுட் திரைப்படமான 'சந்த் சா ரோஷன் செஹ்ரா' படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் 2005ம் ஆண்டு வெளியான ஆப்கா அபிஜித் ஆல்பத்தில் 'லாஃப்ஸோன் மெயின்'ல் தோன்றினார். அதே ஆண்டில் 'ஸ்ரீ' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அடுத்த ஆண்டு தமிழில் வெளியான 'கேடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2007ல் தெலுங்கில் வெளியான 'ஹேப்பி டேஸ்' மற்றும் தமிழில் வெளியான 'கல்லூரி' என இரு கல்லூரி வாழ்க்கை சார்ந்த படங்களில் நடித்திருந்தார் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது
இதைப் பார்த்த மாணவர்களின் பெற்றோர் பாடத்திட்டத்தில் அதுவும் 'சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை' என்ற பாடத்தில் நடிகை தமன்னா குறித்து எதற்காக பேசப்பட வேண்டும், அதை ஏன் எங்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும். அந்தப் பாடத்தில் தமன்னா பற்றின குறிப்பு உடனடியாக நீக்கப்பட வேண்டும்” எனக் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளதுடன் பள்ளி நிர்வாகத்தை நேரடியாக முற்றுகையிட்டு எதிர்ப்பை தெரிவித்தாலும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காததால் கோபமடைந்த பெற்றோர் தனியார் பள்ளிகள் சங்கம் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.