HBD Vikraman: சொந்த பந்தம்ன்னா என்னன்னு தெரியுமா? - 90 கிட்ஸ்களின் ஃபேவரட் டைரக்டர் விக்ரமனின் படங்கள் கொடுத்த நாஸ்டாலஜிக் மொமெண்ட்ஸ்!
தனித்துவம் வாய்ந்த இயக்குனர் விக்ரமனின் பிறந்தநாளான இன்று 90 கிட்ஸ் மத்தியில் எப்படி அவரின் திரைப்படங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்த ஒரு சிறிய தொகுப்பு
![HBD Vikraman: சொந்த பந்தம்ன்னா என்னன்னு தெரியுமா? - 90 கிட்ஸ்களின் ஃபேவரட் டைரக்டர் விக்ரமனின் படங்கள் கொடுத்த நாஸ்டாலஜிக் மொமெண்ட்ஸ்! 90's kids favorite director vikraman birthday special story on how his movies gave a nostalgic moments HBD Vikraman: சொந்த பந்தம்ன்னா என்னன்னு தெரியுமா? - 90 கிட்ஸ்களின் ஃபேவரட் டைரக்டர் விக்ரமனின் படங்கள் கொடுத்த நாஸ்டாலஜிக் மொமெண்ட்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/46f82d8220b7f2d9443b7718dbdd50441680100849592224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
90 கிட்ஸ் ஃபேவரட் இயக்குனர் என்றால் அதில் நிச்சயம் முதலிடத்தில் இருப்பவர் இயக்குனர் விக்ரமன். உறவுகள், குடும்பம் என செண்டிமெண்ட் சார்ந்த கதைகளுக்கு பெயர் போனவர் இயக்குனர் விக்ரமன். 1990ல் வெளியான 'புது வசந்தம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் இன்றும் மக்கள் மனங்களில் எவர்க்ரீன் திரைப்படங்களாக நினைவலைகளில் நிலைக்கின்றன. அவரின் பிறந்தநாளான இன்று அவரின் படங்கள் மூலம் 90ஸ் கிட்ஸ்கள் அனுபவித்த நாஸ்டாலஜிக் மொமெண்ட்ஸ் பற்றி பார்க்கலாம்.
இன்று இளைய தளபதி என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த பூவே உனக்காக திரைப்படத்தை இயக்கியவர் விக்ரமன். விஜய் நடித்த சிறந்த படங்களில் பூவே உனக்காக நிச்சயம் இருக்கும். விக்ரமனின் திரைக்கதை எந்த அளவிற்கு சிறப்பானதாக இருக்கும் அதே அளவிற்கு அவரின் படத்தின் வசனங்களும் இன்றும் 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலம். "காதல் என்பது பூ செடி மாதிரி. ஒரு முறை உதிர்ந்து விட்டால் மறுபடியும் ஓட்ட வைக்க முடியாது' இந்த டயலாக் காதலர்களின் உணர்வை அழகாக வெளிப்படுத்திய ஒரு வசனம் .
இன்றைய தலைமுறையினருக்கு குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் போன்ற செண்டிமெண்ட் எல்லாம் கிடையாது. ஆனால் அவர்களின் மனங்களிக்கும் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கும் விக்ரமனின் திரைப்படங்கள். அதற்கு சான்றாக வெளியான திரைப்படம் 'வானத்தைப்போல'. இது போன்ற ஒரு குடும்ப திரைப்படம் இனி தமிழ் சினிமாவில் வருமா என்பது சந்தேகம் தான். மனதை பிழியும் செண்டிமெண்ட் கட்சிகளால் பார்வையாளர்களின் நெஞ்சங்களை நேரடியாக துளைத்தவர்.
விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூர்யவம்சம், உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற படங்கள் இன்றும் எவர்க்ரீன் படங்கள். விக்ரமனின் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். இன்றும் 90ஸ் களின் பிளே லிஸ்டில் நிச்சயமாக இப்படத்தின் பாடல்கள் இடம் பெரும் அளவிற்கு மெய்மறக்கும் பாடல்கள்.
தமிழில் விக்ரமன் இயக்கியது சுமார் பதினான்கு திரைப்படங்கள் தான் என்றாலும் அவை ஒவ்வொன்றிலும் தனித்துவம் இருக்கும். சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் அவமானங்கள், கடினமான பாதைகள், காதல் தோல்விகள் அவற்றை எல்லாம் கடந்து வாழ்க்கையில் எவ்வாறு அவர்கள் போராடி வெற்றி பெறுகிறார்கள் என்பதை வெகுஜன மக்களுக்கு புரியும் வகையில் இயல்பாக காட்சிகளை அமைப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் விக்ரமன். கொஞ்சம் கூட ஆபாசம் இல்லாமல் கண்ணியமாக காதலை காட்சிப்படுத்தும் அவரின் படங்களை குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம். அவர் மீண்டும் படங்களை இயக்க வேண்டும், இன்றைய தலைமுறையினருக்கு குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை, காதலின் உன்னதத்தையும் எடுத்துரைக்கும் வகையில் படங்களை இயக்க வேண்டும் என்பது தான் 90ஸ் கிட்ஸ்களின் பேராசையாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)