National Film Awards 2022: கோலிவுட்டில் தேசிய விருதுகளை குவித்த திரைப்படங்கள்.. முழு பட்டியலும் உள்ளே..!
National Film Awards 2022 Tamil Winners: மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகளை சூரரைப் போற்று, மண்டேலா மற்றும் சிவரஞ்சனியும், சில பெண்களும் படம் பெற்று அசத்தியுள்ளது.
![National Film Awards 2022: கோலிவுட்டில் தேசிய விருதுகளை குவித்த திரைப்படங்கள்.. முழு பட்டியலும் உள்ளே..! 68th National Film Awards 2022 Tamil Winners List Soorarai Pottru Mandela Check Complete List National Film Awards 2022: கோலிவுட்டில் தேசிய விருதுகளை குவித்த திரைப்படங்கள்.. முழு பட்டியலும் உள்ளே..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/22/3521b06116822cd8784e631bf141edb41658491296_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழில் வெளியான திரைப்படங்கள் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது.
- சிறந்த படம் - சூரரைப்போற்று
- சிறந்த நடிகர் - நடிகர் சூர்யா (சூரரைப்போற்று ) ( அஜய் தேவ்கனுடன் பகிர்ந்து கொள்கிறார்)
- சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று)
- சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )
- சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)
- சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
- சிறந்த அறிமுக இயக்குநர் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
- சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் ( சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)
- சிறந்த தமிழ் படம் - சிவரஞ்சனியும் சில பெண்களும் ( இயக்கம் : இயக்குனர் வசந்த்)
- சிறந்த துணை நடிகை - லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் சில பெண்களும்)
- சிறந்த எடிட்டிஙல் – ஸ்ரீகர் பிரசாத் ( சிவரஞ்சனியும் சில பெண்களும்)
தமிழில் வெளியான சூரரைப்போற்று வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மண்டேலா மற்றும் சிவரஞ்சனியும் சில பெண்களும் நல்ல விமர்சனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்தியாவில் திரைப்படம் எடுக்க உகந்த நகரமாக மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Best Actor Award: நீ ஜெயிச்சிட்ட மாறா.. பிறந்தநாள் பரிசாக தேசிய விருதை தட்டித்தூக்கிய சூர்யா..!
மேலும் படிக்க : ‛சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ அன்றே கணித்து பாராட்டிய நடிகர் சூர்யா!
மேலும் படிக்க : Mandela Movie Awards: மண்டேலா திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநர் விருதுபெறும் மடோன் அஷ்வின்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)