மேலும் அறிய

Suriya Jyothika: ஊர் கண்ணே படுது! ஜோவுடன் ஜோடியாக தேசிய விருதுவாங்கிய நடிகர் சூர்யா!

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜோவுடன் ஜோடியாக நடிகர் சூர்யா தேசிய விருது வாங்கியுள்ளார்.

பிரபலமான தமிழ் திரையுலக தம்பதியினர் நடிகர் சூர்யா மற்றும்  நடிகை ஜோதிகா.  இருவரும் முதன் முதலில் இணைந்து நடித்த படம், பூவெல்லாம் கேட்டுபார்.  1999ல் இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்தனர். இந்த திரைப்படத்தில் இருவரும் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது இவர் தான் நமது வாழ்க்கைத் துணை  என  இருவருமே யோசித்திருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் பின்னர் இருவரும் அடுத்தடுத்து ”உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதில் , 2005ல் வெளியான மாயாவி திரைப்படத்திற்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமாவில் இருந்து வரும் ஒரு எழுதப்படாத விதியாக இருப்பது, திருமணம் ஆன கதாநாயகிகளை சினிமாவில் சேர்க்க தயாரிப்புக் குழு சம்மதிப்பதில்லை. அது ஒரு வியாபார யுக்தியாக உள்ளது. அதே நேரத்தில், பெண்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்ற பொதுப் புத்தியும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 

பத்து ரூபாய்க்கு நடிக்கச் சொன்னால், நூறு ரூபாய்க்கு நடிப்பவர் என்ற பெயர் பெற்றவர் நடிகை ஜோதிகா. இவரும் திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டார் என எல்லோரும் பேசிய நிலையில், அவரும் அப்படித்தான் இருந்தும் வந்தார். நடிகர்கள் கம்பேக் கொடுப்பதைப் போல், நடிகைகள் கம்பேக் கொடுப்பார்களா என்ற கேள்வி எல்லாம் தமிழ் சினிமா உலகில் இருந்ததே கிடையாது. அதனை மாற்றி அமைத்தவர், நடிகை ஜோதிகா என்று தான் சொல்ல வேண்டும். அவருக்குள் அப்படியான நம்பிக்கையை அளித்தவர் மலையாள திரையுலகின் நாயகி மஞ்சு வாரியர். மஞ்சு வாரியர் நடிப்பில் மலையாளத்தில் உருவாகி வெளியான படம் ”ஹவ் ஓல்ட் ஆர் யூ”. இந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் மீண்டும் தனது அசாத்திய நடிப்புடன் திரையில் தோன்றிய ஜோ அனைவரையும் மிரள வைத்தார். 

ஆனால் அதை தொடர்ந்து அனைவரும் எதிர் பார்த்ததைப் போல், ஜோவும் நடிப்பதை தொடர்ந்தார். திருமணத்திற்கு முன்னரும் அதன் பின்னரும் இவர் நடித்த பல படங்களுக்கு இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அது இன்று வரை சாத்தியப்படவில்லை. கனவாகவே நீடித்து வந்த நிலையில், இன்றைக்கு ஜோதிகா மற்றும் சூர்யா ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்து ஓடிடி தளத்தில் வெளியாகி 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், சிறந்த பின்னணி இசை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை எனும் ஐந்து விருதுகளை வாங்கி குவித்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருதினை சூர்யா பெற்றுக்கொள்ளும் போது, நடிகையும் சூர்யாவின் காதல் மனைவியான ஜோதிகா தனது மொபைலில், வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தார். அதேபோல், சிறந்த திரைப்படத்திற்கான விருதினை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக்கொள்ளும் போது அதனை நடிகர் சூர்யாவும் ஜோதிகாவின் காதல் கணவருமான சூர்யா தனது மொபைலில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தார். இதனை பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான காதல் காட்சியாக இருந்தது என இவர்களின் ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget