மேலும் அறிய

'நீயும் நானு ஒன்னு, இது காந்தி பொறந்த மண்ணு’ குழந்தைகளின் உள்ளங்களை எப்படி கவர்ந்தார் விஜய்..?

'குரு படத்தின் 'நன்னாரே...நன்னாரே' பாடல் CD யை சிறுமிகள் தேய்க்க, 'நா அடிச்சா தாங்க மாட்ட' பாடல் CD யை சிறுவர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டனர்'

'சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என' ராஜா சின்ன ரோஜா படத்தில் வரும் இந்த பாடல்தான் சூப்பர் ஸ்டார்களுக்கான மிகச்சரியான வரையறையாக இருக்கும் என நினைக்கிறேன். 

சுட்டிக்குழந்தைகளை கவரும் நாயகர்கள்தான் எப்போதுமே அந்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு உயருகின்றனர். காரணம், குட்டீஸ்களை கவரும் போது அடுத்த 20-25 வருடங்களுக்கான மார்க்கெட்டை ஒரு நடிகர் உருவாக்கிவிடுகிறார். மேலும், 'குழந்தைகள் ஒரு படத்தை பார்க்க விரும்பினால், குழந்தைகள் மட்டுமே தனியாக தியேட்டருக்கு வந்துவிட முடியாது. தங்களுடைய குடும்பத்தையே அடம்பிடித்து தியேட்டருக்கு அழைத்து வந்துவிடுவார்கள். ஒரு டிக்கெட் நான்கு டிக்கெட்டுகளாக மாறிவிடுகிறது. வசூலும் சக்கைப்போடு போடும்.' பல தியேட்டர் அதிபர்கள் இப்படி பேசி கேட்டிருக்கிறேன். 

ஒரு நடிகரை சுற்றி நடக்கும் வணிகத்தை தீர்மானிப்பதில் குழந்தைகள் பெரும் பங்காக இருக்கின்றனர். 'சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்' என பாடுவது சுலபம். ஆனால், உண்மையிலேயே குழந்தைகளை கவர்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. மற்ற வயதுக்கார ரசிகர்களை திருப்திப்படுத்த நல்ல கதையம்சம் உடைய பொழுதுபோக்கு படங்களே போதுமானது. ஆனால், குழந்தைகளை திருப்திப்படுத்த இன்னும் சில மெனக்கெடல்களை எடுத்தே ஆக வேண்டும். வசூல் மன்னன் என தமிழ் சினிமாவின் அரியாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துவிட்ட போதும் குட்டீஸ்களை குஷிப்படுத்த அதிசயப்பிறவி, ராஜா சின்ன ரோஜா, குரு சிஷ்யன் போன்ற படங்களில் நடித்திருப்பார் ரஜினிகாந்த். இதெல்லாம் ரஜினிகாந்தின் வழக்கமான மாஸ் படங்கள்தான் என்றாலும் இதில் குழந்தைகளை மனதில் வைத்து பல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இப்படி குட்டீஸ்களுக்கென்றே பிரத்யேகமாக சில முயற்சிகளை எடுத்ததன் விளைவாகத்தான் ரஜினிகாந்தின் படங்கள் இன்றைக்கும் கொண்டாடப்படுகின்றது.

நீயும் நானு ஒன்னு,  இது காந்தி பொறந்த மண்ணு’ குழந்தைகளின் உள்ளங்களை எப்படி கவர்ந்தார் விஜய்..?
ராஜா சின்ன ரோஜா படத்தில் ரஜினிகாந்த்

ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அத்தனை தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய்தான். குறிப்பாக, குட்டீஸ்களை அதிகம் கவர்ந்ததால்தான் இன்று தமிழ் சினிமாவின் உச்சபட்ச உயரத்தில் அவர் அமர்ந்திருக்கிறார். விஜய்யும் அவ்வளவு எளிதாக குழந்தைகளை கவர்ந்துவிடவில்லை. தொடர்ச்சியாக, பல மெனக்கெடல்கள் மூலமே குழந்தைகளின் மனம் கவர்ந்த நாயகன் ஆனார். குழந்தைகளுக்காக தன் படங்களில் விஜய் பார்த்து பார்த்து செய்த சில விஷயங்களை  தொடரின் இந்த பகுதியில் பார்ப்போம்.

நீயும் நானு ஒன்னு,  இது காந்தி பொறந்த மண்ணு’ குழந்தைகளின் உள்ளங்களை எப்படி கவர்ந்தார் விஜய்..?
ரஜினியுடன் விஜய்

நாளைய தீர்ப்பு, ரசிகன், தேவா போன்ற விஜய்யின் ஆரம்பகால படங்களில் குழந்தைகள் ரசித்து பார்ப்பதற்கான விஷயங்கள் எதுவும் இருந்திருக்காது. கிளுகிளுப்பு + காதல் + கொஞ்சம் ஆக்சன் என இளசுகளை மனதில் வைத்து மட்டுமே அந்த படங்கள் எடுக்கப்பட்டிருக்கும். இவர்தான் விஜய் என மக்களுக்கு ஓரளவுக்கு தெரிந்துவிட்ட பிறகு அவர் நடித்த பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே போன்ற படங்கள் முழுக்க முழுக்க உன்னதமான காதலை போற்றுபவையாக அமைந்தன. பெரிய வெற்றிப் படங்களாக அமைந்திருந்தாலும் இவற்றிலும் பெரிதாக குழந்தைகளை கவர வேண்டும் என்று எந்த மெனக்கெடலையும் விஜய் எடுத்திருக்கமாட்டார். நீயும் நானு ஒன்னு,  இது காந்தி பொறந்த மண்ணு’ குழந்தைகளின் உள்ளங்களை எப்படி கவர்ந்தார் விஜய்..?

90 களின் கடைசி மற்றும் 2000 களில் விஜய் பெரிய ஹிட்கள் கொடுத்து வளர்ந்துவிட்ட நடிகராக இருந்தார். ஆனால், விஜய்க்கு இது மட்டும் போதுமானதாக இல்லை. ஒரு மாஸ் நடிகராக பெரிய நட்சத்திரமாக மாற வேண்டும் என்கிற எண்ணம் விஜய்க்கு இருந்தது. அப்படியெனில், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் விஜய் கவர்ந்தாக வேண்டும். குறிப்பாக, குட்டீஸ்களின் மனதை கொள்ளையடித்து அடுத்த இருபது வருடத்திற்கான ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கியாக வேண்டும். இந்த சூழ்நிலையில்தான் குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக சில மெனக்கெடல்களை விஜய் எடுக்க தொடங்கினார்.நீயும் நானு ஒன்னு,  இது காந்தி பொறந்த மண்ணு’ குழந்தைகளின் உள்ளங்களை எப்படி கவர்ந்தார் விஜய்..?

ஒரு திரைப்படத்தை முழுமையாக பார்த்து  சீன் பை சீனாக பிரித்து மேய்ந்து விவாதித்து நடிகரின் பர்ஃபார்மென்ஸை எடைபோட்டு பார்த்தெல்லாம் குழந்தைகள் தங்கள் மனதை பறிகொடுத்து விடப்போவதில்லை. முதலில் ஒரு முழுப்படத்தை பார்ப்பதற்கான பொறுமையே குழந்தைகளுக்கு இருக்குமா என்பது சந்தேகமே. குழந்தைகளின் ரசனை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.  வண்ணமயமாக...வேடிக்கையாக...ஒரே நொடியில் கடந்து போகக்கூடிய விஷயங்கள் கூட குழந்தைகளை கவர்வதற்கு போதுமானதுதான். சில விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய விளம்பரப்படங்களுக்கு கூட பல குழந்தைகள் ரசிகர்களாக இருப்பதை பார்த்திருப்போம். குழந்தைகளை இழுக்கக்கூடிய எதோ ஒரு வேடிக்கையான சம்பவம் அதில் ஒளிந்திருக்கும். இதே விஷயத்தை சினிமாவுக்கு பொருத்திப் பார்த்தால் பாடல் காட்சிகளில்தான் குறைவான நேரத்தில் பல வேடிக்கையான வண்ணமயமான விஷயங்களை காண்பித்து குழந்தைகளை கவர முடியும்.நீயும் நானு ஒன்னு,  இது காந்தி பொறந்த மண்ணு’ குழந்தைகளின் உள்ளங்களை எப்படி கவர்ந்தார் விஜய்..?

சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகியிருந்த 'குக்கூ...குக்கூ' பாடல் அதிகமாக குழந்தைகளையும் கவர்ந்திருந்தது. காரணம், அந்த பாடலின் வித்தியாசமான இசைக்கோர்ப்பும் வேடிக்கையான பெர்ஃபார்மென்ஸும் தான். இதைத்தான் விஜய் கையில் எடுத்தார். மாஸ் ஹீரோவாக பரிணமிக்க தயாரான காலத்தில் குழந்தைகள் ரசிக்கும்படியான சில பிரத்யேகமான பாடல்களை தன்னுடைய படங்களில் இடம்பிடிக்குமாறு செய்தார். குட்டீஸ்களை மனதில் வைத்து விஜய் அதை  திட்டமிட்டு செய்தாரா இல்லை தற்செயலாக அவருக்கு அமைந்ததா என தெரியவில்லை. ஆனால், 2000 களிலிருந்து வெளியான முக்கால்வாசி விஜய் படங்களில் வேடிக்கையாக வித்தியாசமான இசைக்கோர்ப்புகளோடு விளையாட்டான நடனத்தோடு ஒரு பாடல் இடம்பிடித்திருக்கிறது.நீயும் நானு ஒன்னு,  இது காந்தி பொறந்த மண்ணு’ குழந்தைகளின் உள்ளங்களை எப்படி கவர்ந்தார் விஜய்..?

தமிழன் படத்தில் விஜய்யும் பிரியங்கா சோப்ராவும் பாடிய 'உள்ளத்தை கிள்ளாதே'  பாடல் தொடங்கி வரிசையாக உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ராஜா சின்ன ரோஜாவில் கார்டூன் கேரக்டர்களோடு ரஜினி ஆடுவதை போன்று உள்ளத்தை கிள்ளாதே பாடலிலும் கார்டூன் கேரக்டர்களோடு விஜய் ஆடியிருப்பார். கிட்டத்தட்ட குழந்தைகளின் கேளிக்கை உலகத்தில் விஜய்யும் இறங்கி ஆடியதை போலத்தான் இந்த பாடல் இருக்கும்.நீயும் நானு ஒன்னு,  இது காந்தி பொறந்த மண்ணு’ குழந்தைகளின் உள்ளங்களை எப்படி கவர்ந்தார் விஜய்..?

பத்ரியில் 'என்னோட லைலா' பாடலையும் இந்த வரிசையில் சேர்க்கலாம். இரயில்வே சுமைதாக்கும் கூலியாள் கெட்டப்பில் ஹீரோயினை பின் தொடர்ந்து காதலை வெளிப்படுத்தும் விதத்திலான இந்த பாடலில் விஜய்யின் நடன அசைவுகள் ரொம்பவே இலகுவாக வசீகரிக்கும் வகையில் இருக்கும். அடுத்து, பகவதியில் போடாங்கோ பாடலில் வடிவேலுவுடன் சேர்ந்து அவர் ஸ்டைலுக்கு இறங்கி ஆடியிருப்பார் விஜய். அதுவும் பயங்கர வேடிக்கையாக இருக்கும். இது விஜய்யும் வடிவேலுவும் இணைந்து பாடிய பாடல் வேறு என்பதால் இருவரின் பெர்ஃபார்மென்ஸும் அதகளமாக இருக்கும். இந்த பாடல் என்றில்லை மேலே குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே விஜய் பாடியதுதான். மூன்றுமே வழக்கமான சத்தங்களுடன் இல்லாமல் வித்தியாசமான இசைக்கோர்ப்பில் கேட்டவுடனே கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்த பாடல்கள். குறிப்பாக, குழந்தைகளை!நீயும் நானு ஒன்னு,  இது காந்தி பொறந்த மண்ணு’ குழந்தைகளின் உள்ளங்களை எப்படி கவர்ந்தார் விஜய்..?

கில்லி படத்தின் 'அப்படி போடு' பாடலை சொல்லவே தேவையில்லை. பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி குழந்தைகளின் விளையாட்டு செல்ஃபோன் வரை இறங்கியடித்தது. ஆதியின் 'ஒல்லி ஒல்லி இடுப்பு' பாடலில் புளி மாங்கா புளிப் ஸ்டெப்பை அன்றைக்கே ஆடியிருப்பார் விஜய். இந்த வரிசையில் போக்கிரி படத்தில் வரும் 'வசந்த முல்லை' பாடல் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இதுவும் ஸ்லோ பீட்டில் வழக்கத்தை விட வித்தியாசமான இசைக்கோர்ப்பாகவே இருக்கும்.நீயும் நானு ஒன்னு,  இது காந்தி பொறந்த மண்ணு’ குழந்தைகளின் உள்ளங்களை எப்படி கவர்ந்தார் விஜய்..?

விஜய்யின் பர்ஃபார்மென்ஸ் இதில் அட்டகாசமாக இருக்கும். ஆட்டோ ஸ்பீட் ப்ரேக்கரில் ஏறி இறக்கும் போது அதற்கேற்றவாறு மணி சர்மா அதற்கேற்றவாறு ஒரு தாளம் போட்டிருப்பார் அதற்கு கர்சிப்புடன் சேர்ந்து விஜய் போடும் லேசான ஸ்டெப். தியேட்டரில் சந்திரமுகி படம் பார்க்கும் ஷாட், எம்.ஜீ.ஆர் ஸ்டைல் காண்பிப்பது என இந்த பாடலின் மான்டேஜ் காட்சிகளில் வசீகரித்திருப்பார்.

நீயும் நானு ஒன்னு,  இது காந்தி பொறந்த மண்ணு’ குழந்தைகளின் உள்ளங்களை எப்படி கவர்ந்தார் விஜய்..?

மேலும், மன்னர் கெட்டப்பில் ப்ரேக் டான்ஸெல்லாம் ஆடி இந்த பாடலில் புகுந்து விளையாடியிருப்பார். பிரபுதேவா விஜய்யை வைத்து இயக்கிய இன்னொரு படமான வில்லுவிலும் இதே போன்று வித்தியாசமாக 'வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல' என்கிற பாடல் இடம்பெற்றிருக்கும். இதிலும் வடிவேலுவுடன் சேர்ந்து பயங்கர சேட்டை செய்திருப்பார் விஜய். இடையிடையே சில அனிமேஷன்களுடன் குட்டீஸ்களை இந்த பாடலும் அதிகம் கவர்ந்தது.

இந்த பட்டியலில் வேட்டைக்காரன் படத்தை சேர்த்தே ஆக வேண்டும். இதில் அத்தனை பாடல்களுமே பெரிய ஹிட். அத்தனை பாடல்களுமே அப்போதைய குட்டீஸ்களின் ஃபேவ்ரட். குறிப்பாக, 'நா அடிச்சா தாங்க மாட்ட' பாடல் எதோ ரைம்ஸ் போல அத்தனை குழந்தைகளின் மனதிலும் பதிந்திருந்தது. குரு படத்தின் 'நன்னாரே...நன்னாரே' பாடல் CD யை சிறுமிகள் தேய்க்க, 'நா அடிச்சா தாங்க மாட்ட' பாடல் CD யை சிறுவர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டனர்.நீயும் நானு ஒன்னு,  இது காந்தி பொறந்த மண்ணு’ குழந்தைகளின் உள்ளங்களை எப்படி கவர்ந்தார் விஜய்..?

இந்த பாடல் குழந்தைகளை வெறித்தனமாக கவரப்போகிறது என்பதை விஜய் முன்பே கணித்துவிட்டார் போல, தன்னுடைய மகனான சஞ்சயையும் இந்த பாடலில் ஆட வைத்திருப்பார் விஜய். கேட்ச்சிங்கான வார்த்தைகளையும் வரிகளையும் தேடி தேடி பிடிப்பவரான விஜய் ஆண்டனி 'நா அடிச்சா தாங்கமாட்ட', 'என் உச்சி மண்டைல சுர்ர்' 'கரிகாலன் கால போல' என கேட்டவுடனே எளிதில் மனதில் பதிந்துவிடும் வார்த்தைகள் பாடலாசிரியர்களிடம் வாங்கி அசத்தியிருப்பார். சிறுவர்கள் சுர்ர்....டர்ர்...புர்ர் என தங்கள் இஷ்டத்துக்கு பாடி திரிந்திருந்தனர்.

இப்படி எல்லா படங்களிலும் குழந்தைகளை கவரும் வகையில் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் எதாவது ஒரு பாடல் இடம்பெற்றுவிட வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருந்திருக்கிறார். வெறித்தனமான சண்டைக்காட்சியோடு அறிமுகமாகி பயங்கர பில்டப்போடு ஓப்பனிங் பாடல்களில் மாஸ் காட்டும் விஜய், குழந்தைகளுக்கான பாடல்களில் தன்னுடைய இமேஜையெல்லாம் பொருட்படுத்தாமல் இறங்கி சேட்டை செய்திருப்பார். கிட்டத்தட்ட இந்த மாதிரியான பாடல்களில் விஜய் ஒரு காமெடியனை போன்றுதான் செயல்பட்டிருப்பார். நடன இயக்குனர் சொல்லிக்கொடுத்ததை தாண்டி துறுதுறுவென எதையாவது செய்து கொண்டிருப்பார். ஹீரோயினிடம் பயங்கர மொக்கை வாங்கியிருப்பார். இதெல்லாம் பார்ப்பதற்கு பயங்கர வேடிக்கையாக இருக்கும். இதெல்ல்லாம் குழந்தைகள் முதல் பதின்ம வயது வரை உள்ள சிறுவர்களை வெகுவாக கவர்ந்து அவருடைய ரசிகர்களாகவும் மாற்றியது. நீயும் நானு ஒன்னு,  இது காந்தி பொறந்த மண்ணு’ குழந்தைகளின் உள்ளங்களை எப்படி கவர்ந்தார் விஜய்..?

இந்த பாடல்கள் மீது பொதுவாக சில விமர்சனங்கள் வைக்கப்பட்டதையும் புறந்தள்ளிவிட முடியாது. ஐட்டம் சாங்காக இருந்தாலும், வில்லு படத்தில் வரும் 'டாடி...மம்மி' பாடலும் குழந்தைகளை பெரிதாக ஈர்த்தது. இதில், விஜய் கடினமான ஸ்டெப்களை போட்டு மிரட்டியிருப்பார். அர்த்தம் புரியாமல் இந்த பாடலையும் குழந்தைகள் ரைம்ஸ் போல படித்துக் கொண்டிருந்தனர். 'டாடி..மம்மி' 'நா அடிச்சா தாங்கமாட்ட' பாடல்களையெல்லாம் பட்டிமன்ற பேச்சாளர்கள் நார்நாராக கிழித்து தொங்கவிட்டிருக்கிறார்கள். சர்ச்சைகளையெல்லாம் தாண்டி இந்த பாடல்கள் குழந்தைகளை பெரியளவில் ஈர்த்தது என்பதே உண்மை.

பாடல்களை தாண்டி விஜய்யுடன் நட்பாகவோ இல்லை செல்லச்சண்டை போடும் வகையிலோ சிறுவர்-சிறுமி கதாபாத்திரங்களும் தொடர்ச்சியாக விஜய் படங்களில் இடம்பெற்று வந்திருக்கும். கில்லி, சச்சின், அழகிய தமிழ்மகன் தொடங்கி தெறி, பைரவா என இதற்கும் பல உதாரணங்கள் இருக்கிறது.  

படங்களில் ஹீரோக்கள் பேசும் பன்ச் வசனங்களும் குழந்தைகளை வெகுவாக கவரும். பாட்ஷா படம் வெளியான போதெல்லாம் நான் பிறந்திருக்கவே இல்லை. ஆனால், சிறுவயதில் அனிட்ச்சையாக அந்த 'ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி' வசனம் மனதில் பதிவாகியிருந்தது. காலங்கள் கடந்தும் தலைமுறைகள் கடந்து இன்றைக்கும் அந்த வசனத்தை டிக்டாக்கில் எதோ ஒரு சுட்டிக்குழந்தை பேசிக்கொண்டுதான் இருக்கிறது. அதேமாதிரியே, விஜய்க்கும் சில நச் பன்ச்கள் அமைந்திருக்கின்றது. திருமலையின் 'வாழ்க்கை ஒரு வட்டம்டா...' போக்கிரியின் 'நா ஒரு தடவ முடிவு பண்ணிட்டா' மாதிரியான வசனங்கள் விஜய்க்கான அடையாளங்களாக இன்றும் இருக்கிறது. 'உனக்கெல்லாம் வேற.. வேற....வேற வேட்டைக்காரன்தாண்டா வேணும்' என வேட்டைக்காரனில் பேசும் வசனம் அப்போது செம ரீச். ஸ்கூல், டியுசன் என போகிற இடமெல்லாம் இந்த வசனம் காதில் விழுந்துக்கொண்டே இருக்கும். 'நீயும் நானு ஒன்னு...காந்தி பிறந்த மண்ணு' என அழகிய தமிழ்மகனில் வேடிக்கையாக கவிதை என்று விஜய் பேசிய வசனமும் பட்டித்தொட்டியெங்கும் ரீச் ஆனது.

ரஜினி ரிஸ்க் எடுத்ததை போலவே விஜய்யும் குழந்தைகளுக்காக ரிஸ்க் எடுத்து நடித்த படம் புலி. கத்தி என்ற மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்த இந்த படம் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. இதை குழந்தைகளுக்கான படம் என்று விளம்பரம் செய்யாமல் வழக்கமான விஜய் படம் போலவே தடபுடலாக விளம்பரம் செய்தது மிகப்பெரிய சறுக்கலாக அமைந்தது. சமீபத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்திலெல்லாம் குழந்தைகளுக்கென்று மெனக்கெட்டு எதையும் செய்திருக்காவிடிலும் 'வாத்தி கம்மிங்' 'குட்டி ஸ்டோரி' போன்ற பாடல்கள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது 

பீஸ்ட் படத்தில் விஜய்யை இயக்கிக் கொண்டிருக்கும் நெல்சன் ரகளையான ஆள் என்பதால் விஜய்யை இன்னும் ஜாலி மோடுக்கு கொண்டு சென்று அடுத்த இருபது வருடத்திற்கான ரசிகர்களை உருவாக்கிவிடுவார் என்ற நம்பிக்கையிருக்கிறது.

விஜய் குறித்த ஃப்ளாஷ்பேக்கை ஓட்டி பார்க்கும் போது, காலில் கர்சிப்பை கட்டிக்கொண்டு மதுர விஜய்யாகவும் காலரில் கர்சிப்பை போட்டுக்கொண்டு போக்கிரி விஜய்யாகவும் ஃபீல் செய்து பள்ளி விழாக்களில் ஆடிக் கொண்டிருந்த அந்த சிறுவயதுக்கே மீண்டும் சென்றுவிடலாமோ என தோன்றுகிறது. 

நீயும் நானும் ஒன்னும்...
டீக்கடையில நின்னு..
தின்னு பாரு பன்னு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
Embed widget