மேலும் அறிய

2022 Trending Celebrities: ஜானி டெப் முதல் ஜூலியா ஃபாக்ஸ் வரை.. 2022 -ல் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியல்!

2022 Trending Celebrities: இந்த ஆண்டில் அதிகளவில் ட்ரெண்டிங்கிள் இருந்து பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

இந்த ஆண்டில், அதிகமாக தேடப்பட்ட பிரபலங்கள் குறித்தும் இந்தியாவில் அதிகளவில் தேடப்பட்ட பிரபலங்கள் குறித்தும் இங்கு பார்க்கலாம். 

ஜானி டெப்-ஆம்பர் ஹெர்ட்:

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஹீரோவாக திகழ்பவர் ஜானி டெப். பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் படம் மூலம் புகழ் பெற்ற இவரும் இவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்டும் இந்திய உள்பட பல நாட்டு மக்களுக்கும் பரீட்சியமான முகமாக மாறி விட்டனர். அதற்கு காரணம், இவர்கள் இருவருக்கும் இடையேயான அவதூறு வழக்கு விசாரணைதான். ஏப்ரல்-ஜூலை மாதங்களில் இவர்கள் அதிகமாக ட்ரெண்டாகியுள்ளனர். இதனால், அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் ஜானி டெப் முதல் இடத்திலும், ஆம்பர் ஹெர்ட் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். 

2022 Trending Celebrities: ஜானி டெப் முதல் ஜூலியா ஃபாக்ஸ் வரை.. 2022 -ல் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியல்!

வில் ஸ்மித்-க்ரிஸ் ராக்:

இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஆஸ்கர் நிகழ்ச்சியும், அதில் நடந்த அதிர்ச்சி சம்பவமும் அனைவரும் அறிந்த கதை. நகைச்சுவை கலைஞர் க்ரிஸ் ராக், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா பிங்கட் ஸ்மித்தின் மொட்டைத் தலையை வைத்து, விளையாட்டாக ஜோக் அடித்தார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத வில் ஸ்மித், மேடையேறி க்ரிஸ் ராக்கின் கண்ணத்தில் ‘பளார்’ என்று அரை கொடுத்தார். வில் ஸ்மித் அரைந்த வீடியோவும், அதற்கு க்ரிஸ் ராக் கொடுத்த ரியாக்ஷனும் மீம் டெம்ப்ளேட்டாக இன்றுவரை சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்த நிகழ்வினால், அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் வில் ஸ்மித் இரண்டாவது இடத்திலும், க்ரிஸ் ராக் நான்காவது இடத்திலும் உள்ளனர். 

ஜாடா பிங்கெட் ஸ்மித்:

நடிகர் வில் ஸ்மித்தின் மனைவிதான் ஜாடா பிங்கெட் ஸ்மித். இவர், தலையில் முடியின்றி காட்சியளிப்பது ஏன் என்ற கேள்வி, ஆஸ்கர் சம்பவத்தையடுத்து அனைவர் மனதிலும் தோன்றியது. இதனால், இவர் உலகில் அதிகம் தேடப்படும் நடிகர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். 

2022 Trending Celebrities: ஜானி டெப் முதல் ஜூலியா ஃபாக்ஸ் வரை.. 2022 -ல் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியல்!

ஜோசஃப் குயின்:

ஸ்ட்ரேன்ஜர் திங்க்ஸ்(Stranger Things) சீரீஸின் நான்காவது சீசனில் நடித்து பிரபலமானவர் ஜோசஃப் குயின். இவர், கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரிலும் கோனர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவரும் ஆங்கில ராப் பாடகரான டோஜா கேட்டும் காதலித்து வருவதாக தகலவ்கள் பரவியது. இதனால், உலகில் அதிகமாக தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில், ஆறாவது இடத்தில் இருக்கிறார் ஜோசஃப். 

எவான் பீட்டர்ஸ்:

கடந்த செப்டம்பர் மாதம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி, பலரையும் தூங்க விடாமல் செய்த தொடர் ஜெஃப்ரி தாமர்(Jeffrey Dahmer). உண்மையான சைக்கோ கொலைகாரனான ஜெஃப்ரி தாமரை வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடரில், ஜெஃப்ரியான நடித்தவர் எவான் பீட்டர்ஸ். இதனால், இவரை அக்டோபர் மாதத்தில் மக்கள் அதிகமாக தேடியுள்ளனர். இவர், அதிகமாக தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். 

ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்:

ஸ்பைடர் மேன் சீரிஸ் படங்களில் மிகவும் அன்டர் ரேட்டட் ஸ்பைடர் மேனாக கருதப்படுபவர் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட். இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தில் மற்ற இரண்டு ஸ்பைடர் மேன்களுடன் சேர்ந்து நடித்திருந்தார். இவர், அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார். 

2022 Trending Celebrities: ஜானி டெப் முதல் ஜூலியா ஃபாக்ஸ் வரை.. 2022 -ல் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியல்!

ஜூலியா ஃபாக்ஸ்:

இத்தாலியை சேர்ந்த ஹாலிவுட் நடிகை ஜூலியா ஃபாக்ஸ். சொர்ப்ப படங்களிலேயே நடித்துள்ளார். இவரும், அமெரிக்காவைச் சேர்ந்த ராப் பாடகருமான கான்யே வெஸ்டும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஜூலியா ஃபாக்ஸ் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். 

எஸ்ரா மில்லர்:

ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஃப்ளாஷாகவே (Flash)  அறிமுகமானவர் எஸ்ரா மில்லர். இவர், Flash என்ற தொடரில் நடித்து வருகிறார். இவர், டகோடா என்ற பெண்ணை போதைப் பொருட்களைக் கொடுத்து தன் பிடியில் வைத்திருந்ததாக சில வதந்திகள் கிளம்பியது. இந்த செய்தி பரவத் தொடங்கிய சமயங்களில் இவர் அதிகமாக மக்களால் தேடப்பட்டுள்ளார். இதனால், இவர் அதிகமாக தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget