(Source: ECI/ABP News/ABP Majha)
திரும்பிவாங்க அப்பு.. 20 ஆண்டுகள்.. புனீத் ராஜ்குமாரை கொண்டாடும் கன்னட ரசிகர்கள்..
அப்பு என்பது அவர் நடித்த முதல் திரைப்படத்தின் பெயர். ஆம், 2002ம் ஆண்டில், இயக்குனர் பூரி ஜெகநாத் தனது எண்டர்டெயினர் படமான 'அப்பு'வில் அவரை ஒரு முன்னணி பாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார்
கன்னட மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் நபர்களில் ஒருவர் நடிகர் புனித் ராஜ்குமார். அவரது தலைமுறையில் மிகவும் விரும்பப்பட்ட நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார், கன்னடத் திரைப்பட உலகின் பெரும் நட்சத்திரமான ராஜ்குமாரின் மகன் ஆவார். உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களால் அவர் அப்பு என்று அழைக்கப்படுகிறார், அதற்கான காரணம் என்ன? மேலும், கன்னட மக்களுக்கு மிகவும் நெருக்கமான, மிகவும் விரும்பப்படும் அந்தப் பெயரை அவர் எவ்வாறு பெற்றார்?. அப்பு என்பது அவர் நடித்த முதல் திரைப்படத்தின் பெயர். ஆம், 2002ம் ஆண்டில், இயக்குனர் பூரி ஜெகநாத் தனது எண்டர்டெயினர் படமான 'அப்பு'வில் அவரை ஒரு முன்னணி பாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். புனீத் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்த முதல் படம் மிகவும் பிரபலமானது, படத்தின் தலைப்பின் அடிப்படையில் பின்னாளில அவர் அனைவராலும் அப்பு என அழைக்கப்படலானார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 26-இல்தான் புனித் ராஜ்குமாரின் முதல் படம் அப்பு வெளியானது. கன்னட சினிமாவின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் என்கிற அப்பு திரைப்படத் துறைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்ததை இது குறிக்கிறது.புனீத் நடிகராகப் பார்வையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார், இன்று வரை அவர் தனது சொந்த பெயரை விட அப்பு என்கிற பெயரில்தான் அதிகம் நினைவில் கொள்ளப்படுகிறார்.
View this post on Instagram
அப்பு திரைப்பபடம் அன்றைய காலக்கட்டத்தில் சூப்பர்ஹிட்டானது மேலும் திரையரங்கில் 200 நாட்களைக் கடந்து ஓடியது. ஒரு டிப்பிக்கல் கல்லூரி இளைஞனாக நடித்தது அவருக்கு ஒரு ரொமாண்டிக் ஹீரோ பிம்பத்தை இந்தத் திரைப்படம் வழியாகக் கொடுத்தது. மேலும் கூடுதலாக அவரது சிறப்பான நடனத் திறமை அவருக்கான தீவிரமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. படம் சூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டது.இந்தப் படம் வெளியாகத் தற்போது 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர்.