மேலும் அறிய

20 Years of Ghilli: ரிலீஸான நேரத்தில் தியேட்டர்களெல்லாம் திருவிழா.. 20 ஆண்டுகளை நிறைவு செய்த கில்லி!

நடிகர் விஜய் நடித்த கில்லி படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகளை நிறைவடையும் நிலையில், வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

நடிகர் விஜய் நடித்த கில்லி படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஆக்ஷன் ஹீரோ விஜய்

1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படம் மூலம் விஜய் அறிமுகமாகி அடுத்த 12 ஆண்டுகளுக்கு பெரும்பாலும் காதல் கதையில்தான் ஹீரோவாக நடித்து வந்தார். இந்த நிலையில்தான் அந்த பாதையில் இருந்து மெல்ல விலகி ஆக்ஷன் ஹீரோவாக மாற முடிவெடுத்தார். அந்த சமயத்தில் விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக முன்னிறுத்தியதில் கில்லி படத்துக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வெளியான இப்படத்தில் திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெனிபர், தாமு, நாகேந்திர பிரசாத் என பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசை அமைத்த கில்லி படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வெளியாகிய ஒக்கடு படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் பின்னால் ஏகப்பட்ட சுவாரசியமான சம்பவங்கள் உள்ளது. 

கில்லி படத்தின் டாப் 10 சம்பவங்கள்!

1. ஒக்கடு படத்தின் ரீமேக் தான் என்றாலும் தமிழில் கில்லியை பார்க்கும்போது அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். சொல்லப்போனால் தில், தூள் என விக்ரமை வைத்து இரண்டு படங்களை இயக்கிய தரணி மூன்றாவது முறையாக அவருடன் தான் இணைவார் என அனைவரும் நினைத்தனர். ஆனால் விஜய்யுடன் இணைந்து ஆச்சரியப்படுத்தினார். இந்த கூட்டணி மீண்டும் 2008 ஆம் ஆண்டு குருவி படத்தில் இணைந்தது.

2. கில்லி படத்தின் வசனங்களை டிவியில் மியூட் போட்டுவிட்டு சொல்ல சொன்னாலும் மனப்பாடமாக சொல்வார்கள். அந்த அளவுக்கு அனைவரையும் கவர்ந்த வசனங்களை எழுதியது இயக்குனர் பரதன். இவர் விஜய்யை வைத்து அழகிய தமிழ் மகன் மற்றும் பைரவா படங்களை இயக்கினார்.

3. த்ரிஷா கில்லி படத்தில் தான் முதல் முதலாக விஜய்யுடன் இணைந்து நடித்தார். இந்த ஜோடி தமிழ் சினிமாவின் ஆன் ஸ்கிரீன் பெஸ்ட் ஜோடி என்ற பெருமையை பெற்றது. மேலும் திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ என 5 படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

4. கில்லி படத்தில் நடிகர் விஜய் மேக்கப் இல்லாமல் நடித்திருப்பார். கபடி காட்சியில் நிஜமான மணலை எடுத்து உடலிலும்,  முகத்திலும் பூசிக்கொண்டு நடித்தது, ஷூட்டிங் சமயத்தில் முகத்தில் ஏற்பட்ட பருவை மறைக்காமல் ஒரிஜினலாக விஜய் நடித்திருப்பதை காணலாம்.

5. கில்லி படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் ஒக்கடு படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களை அப்படியே பயன்படுத்த கேட்டுக் கொண்டார். இதனை மறுத்த வித்யாசாகர் அதைவிட சூப்பரான பாடல்களை போட்டு தருகிறேன் என்று மாஸ் காட்டி இருப்பார்.

6. கில்லி படத்தில் இடம்பெற்ற அர்ஜுனரு வில்லு பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுதிய நிலையில் இதற்காக அவர் மூன்று மாதங்கள் நேரம் எடுத்துள்ளார்.

7. இந்த படத்தில் இடம்பெற்ற அப்படி போடு பாடல் வெளியான காலகட்டத்தில் சக்கை போடு போட்டது. இன்றளவும் விஜய்யின் தலைசிறந்த பாடல்களில் இப்பாடலுக்கு தனி இடம் உண்டு.

8. தமிழ் சினிமாவில் நடிகர் பிரகாஷ்ராஜ் எத்தனையோ படங்களில் வெவ்வேறு விதமான கேரக்டர்கள் செய்தாலும் கில்லி படத்தில் இடம்பெற்ற அவரின் முத்துப்பாண்டி கேரக்டர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியது. குறிப்பாக செல்லம் ஐ லவ் யூ என அவர் சொல்லும் மாடுலேஷன் இன்றும் பிரகாஷ்ராஜ் எங்கு சென்றாலும் சொல்ல சொல்லி கேட்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

9. கில்லி படம் வெளியாகிய போது நம்மில் பலரும் சிறுவர்களாகவும், இளம் வயதினராகவும் இருந்திருப்போம். எந்தவித லாஜிக்கும் பார்க்காமல் கொண்டாடப்பட்ட கில்லி 200 நாட்களைக் கடந்து பல தியேட்டர்களில் ஓடியது.

10. ரீ ரிலீஸ் படங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் கில்லியும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் இருபதாம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி பல காட்சிகள் ஹவுஸ்புல் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget