10 years of Vijay in Twitter : கருத்து சொல்ற வேலையே இல்ல... 10 ஆண்டுகளில் இத்தனை ட்வீட்டா... குஷியான ஃபாலோவர்கள்
ட்விட்டரில் நடிகர் விஜய் இணைந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார். உலகளவில் விஜய் நற்பணி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் மூலம் பல சமூக நல சேவைகளும் செய்யப்பட்டு வருகின்றன. ரசிகர்களின் விருப்பங்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதில் கில்லாடி கிங் விஜய்.
'நாளைய தீர்ப்பு' திரைப்படம் மூலம் தனது திரை பயணத்தை தொடர்ந்த நடிகர் விஜய் தற்போது தளபதி 67 வரை வெற்றிகரமாக நகர்த்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ட்விட்டரில் விஜய் :
ரசிகர்களின் இதயத்துடிப்பாக இருந்து வரும் விஜய் மிகவும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள சமூக வலைத்தள பக்கமான ட்விட்டரில் கடந்த ஆண்டு 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இணைந்துள்ளார். எனவே இந்த மாதத்துடன் விஜய் ட்விட்டரில் 10 ஆண்டு பயணத்தை நிறைவு செய்கிறார். 10 ஆண்டுகளில் விஜய் இதுவரை 391 ட்வீட்களை மட்டுமே பகிர்ந்துள்ளார். ஒரு சில பிரபலங்களை போல சமூக பிரச்சனைகளுக்கு கருத்து கூறுகிறேன் என எதையும் செய்யாமல் முக்கியமான விஷயங்களை மட்டுமே இதுவரையில் ட்வீட் செய்து வருகிறார். தன்னுடைய படங்கள் குறித்த டைட்டில், பாடல்கள், டிரைலர், ரிலீஸ் தேதி போன்ற முக்கியமான தகவல்களையே அவர் பெரும்பாலும் ட்வீட் செய்துள்ளார். அவர் பகிர்ந்த தகவல்கள் குறைவு என்றாலும் ட்விட்டரில் சுமார் 4.3 மில்லியன் ரசிகர்கள் அவரை பின்தொடர்கிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். மேலும் விஜய் யாரையும் ட்விட்டரில் பின்தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லைக்ஸ்களை குவிக்கும் ட்வீட் :
'லியோ' திரைப்படத்தின் டைட்டில் ப்ரோமோ தான் விஜய் சமீபத்தில் பகிர்ந்துள்ள ட்வீட். அதற்கும் முன்னர் வாரிசு படத்தின் டிரைலர், பதான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்த்துக்கள் இப்படி சில முக்கியமான ட்வீட்கள் மட்டுமே உள்ளன. ஒரு சில ட்வீட்கள் என்றாலும் ரசிகர்களின் வியூஸ் மற்றும் லைக்ஸ்கள் எகிறும். குறிப்பாக லியோ படத்தின் டைட்டில் ட்வீட்டுக்கு மட்டுமே 5 மில்லியனுக்கும் மேலான வியூஸ் மற்றும் 1.8 மில்லியன் அதிகமான லைக்ஸ்களும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மிகவும் அமைதியான பர்சனாலிட்டி கொண்டவர் என்றாலும் கேமரா முன்னாடி போய் நின்று விட்டார் என்றால் அதிரடி தான். அவரின் ரிசர்வ்டான பர்சனாலிடியை சோசியல் மீடியாவிலும் கையாளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.