இந்தாங்க..லிஸ்ட்..! ஓடிடியில் இந்தவாரம் வெளியாகவுள்ள டாப் 10 வெளியீடுகள்!
கொரோனாவால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் ஓடிடி தளங்கள் மூலம் திரைப்படங்கள் சினிமா ரசிகர்களை சென்று சேர்ந்தே வருகிறது. குறிப்பாக ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் இருக்கும் மக்களுக்கு ஓடிடி தளங்களே பொழுதுபோக்கு. பல தரப்பட்ட மொழிகள், பல படங்கள் கிடைப்பதால் ஓடிடி தளங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரெட்பிளிக்ஸ், அமேசான்,ஜீ5, ஹாஸ்டார் போன்ற தளங்கள் இந்த வாரத்தில் புதுப்படத்தை களம் இறக்குகின்றன.
1.கர்ணன் - அமேசான்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது கர்ணன். உரிமைக்காக போராடும் இளைஞனாக தனுஷ் நடித்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற கர்ணன் திரைப்படத்தை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. இந்த திரைப்படம் வரும்14ம் தேதி அமேசானில் வெளியாகவுள்ளது.திரையில் தவறவிட்டவர்கள் வீட்டுத்திரையில் கண்டுகளிக்கலாம்.
2.நெஞ்சம் மறப்பதில்லை - ஜீ5.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு காத்துக்கிடந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்த இத்திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது. இந்நிலையில் தற்போது ஓடிடி தளத்தில் வரும் 14ம் தேதி வெளியாகவுள்ளது.
3.LOVE, DEATH + ROBOTS V2 - நெட்பிளிக்ஸ்
LOVE, DEATH + ROBOTS V2 நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் அனிமேஷன் ஆந்தாலஜி தொடராகும். அறிவியல் புனைகதை, கற்பனை, திகில் மற்றும் நகைச்சுவை கலந்து இந்த தொடர் உருவாகியுள்ளது. டிம் மில்லர் மற்றும் டேவிட் பிஞ்சர் இத்தொடரை உருவாக்கி உள்ளனர். வரும் 14ம் தேதி வெளியாகவுள்ளது
4.RADHE – ஜீ5.
ராதே திரைப்படம் சல்மான்கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்தி திரைப்படம். இப்படத்தில் திஷா பதானி, ரன்தீப் ஹூடா, ஜாக்கி ஷிராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வழக்கமான பாலிவுட் ஆக்ஷன் படங்களை போல் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் ஸ்பெஷலாக ஓடிடியில் களம் இறங்கும் ராதே ரசிகர்களை கவருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படம் வரும்13ம் தேதி வெளியாகவுள்ளது.
5.THE WOMAN IN THE WINDOW – நெட்பிளிக்ஸ்
ஏ. ஜே. ஃபின் என்பவர் எழுதிய THE WOMAN IN THE WINDOW என்ற புத்தகம் அதே பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. நியூயார்க்கில் வசிக்கும் பெண் தனது புதிய அண்டை வீட்டாரை வேவு பார்ப்பதும், அதன் மூலம் அவள் சிக்கலில் சிக்கு வாழ்க்கை மாறுவதும் என இப்படத்தில் கதைமுடிச்சு உள்ளது. சஸ்பென்ஸ் த்ரில்லர் ரசிகர்களை இப்படம் ஏமாற்றது என எதிர்பார்க்கலாம். மே 14ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
6. THE UNDERGROUND RAILROAD - அமேசான் பிரைம்
கொல்சன் வைட்ஹெட்டின் என்ற நாவலாசிரிய எழுதிய THE UNDERGROUND RAILROAD என்ற நாவல் அதே பெயரில் சிறிய தொடராக வெளியாகவுள்ளது. 19ம் நூற்றாண்டில் தென்கிழக்கு அமெரிக்காவில் உள்ள தோட்டங்களில் அடிமையாய் இருந்த இருவர் ரகசிய ரயில் அமைப்பை பயன்படுத்தி தப்பிக்கும் கதைதான் THE UNDERGROUND RAILROAD. இந்த நாவல் புலிட்ஃசர் விருது பெற்றுள்ளது. வரும் 14ம் தேதி வெளியாகவுள்ளது.
7. ALMA MATTERS - நெட்பிளிக்ஸ்
அல்மா மேட்டர்ஸ் என்பது மூன்று பகுதிகள் கொண்ட ஆவணத் தொடராகும், இது இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்களின் நேர்காணல்கள் அடங்கியது. ஐஐடிக்குள் நுழைய மாணவர்கள் எடுத்த சிரத்தை, உள்ளே அவர்களின் அனுபவம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஐஐடி தொடர்பாக பலருக்கும் தெரியாத தகவல்களை பெற இந்த ஆவணத்தொடர் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 14ம் தேதி வெளியாகவுள்ளது.
8.WONDER WOMAN 1984 - அமேசான்
பிரபல திரைப்படமான வொண்டர் வுமன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வொண்டர் வுமன் 1984 வெளியாகவுள்ளது. இது தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளி வரும் 15 தேதி வெளியாகிறது.இப்படத்தை பேட்டி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். வொண்டர் வுமன் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
9. HIGH SCHOOL MUSICAL: THE MUSICAL: THE SERIES (S2) - ஹாட்ஸ்டார்
இது ஒரு இசை நிகழ்ச்சி தொடர்பான தொடராக உள்ளது. இசைக்குழு தங்களது “பியூட்டி அண்ட் தி பீஸ்ட்” நிகழ்ச்சிக்கு தயாராவது, அவற்றை சுற்றும் சுவாரஸ்ய கதைக்களமாகவும் இந்த தொடர் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 14ம் தேதி வெளியாகவுள்ளது.
10. MONEY, EXPLAINED - நெட்பிளிக்ஸ்
MONEY, EXPLAINED என்பது நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள பணம் தொடர்பான ஆவணப்படம். பணம், மோசடி, லாபம், வங்கிக்கடன் என பணத்தை மையமாக வைத்து நடக்கும் நடைமுறைகளும் அதைச்சுற்றி நடக்கும் வணிகமுமே இந்தப்படம். எவ்வளவு உழைத்தும் கடைசி காலத்தில் போதுமான கையிருப்பு ஏன் இருப்பதில்லை? சூதாட்டங்களில் ஏமாற்றப்படுவது எப்படி? என பல விஷயங்களை இப்படம் சுவாரஸ்யமாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வரும் இன்று இப்படம் வெளியாகிறது.